உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

ஊ.

மீட்டுருவாக்கம்

சுவடி யல்

ஒப்பிடும்போது கிடைத்த எல்லாச் சுவடிகளிலும் ஒரு சொல், தொடர்... பகுதி ஒரே மாதிரியாக விடுபட்டிருப்பதைக் காணலாம். அல்லது ஒரு சுவடி மட்டுமே கிடைத்திருப்பின் அதில் மேற்கூறிய வாறு விடுபட்டோ ஏடு ஒடிந்தோ துளையாகியோ இருக்கலாம். அவ்விடங்களை நிரப்பிப் பதிப்பித்தல் மீட்டுருவாக்கம் எனப்படும். இச்செயலை மேற்கொள்ளுவதற்குச் சில வழிகள் துணை நிற்பன.

அவை:

1. அதே நூலின் உரையில் கிடைக்கும் சொற்கள், சொற் பொருள்கள், பிற செய்திகள் சய்திகள் இவற்றைக் கொண்டு விடுபட்ட மூலத்தை உறுதிப்படுத்தலாம்.

2.

மேற்கோளாக வந்துள்ள பிற சுவடிகள், நூல்களின் துணை கொண்டு நிரப்பலாம்.

3. பிற நூல்களில் காணும் ஒத்த கருத்துகள் அல்லது சொற் களின் துணையாலும் நிரப்பலாம்.

4. பதிப்பாசிரியர் பொருட்தொடர்பிற்கு ஏற்பத் தம் நுட்பத் தால் நிரப்பவும் செய்யலாம்.

எவ்வாறாயினும்

நிரப்பப்பட்ட பகுதிகளை அடைப்புக் குறிக்குள் காட்டி, அதன் காரணத்தை முன்னுரையில் சுட்டுதல் வேண்டும்.

நூலின் உரை, பிறநூல் கருத்து ஆகியவற்றின் துணைகொண்டு மீட்டுருவாக்கம் செய்து பதிப்பிக்கப்பட்டுள்ளதற்குக் களவியற் காரிகையை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

மேலும்,

"மிகவும் முயன்று, பொருள் தொடர்பைக் கொண்டும் சிதம்பரப் பாட்டியல், பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல் என்பவற்றின் துணை கொண்டும், இயன்றவரை ஊகித்தறிந்து, பொடிந்து போன எழுத்துக்களையும் சொற் களையும் பெய்து பொருந்திய முறையில் இங்கு நிறைவு செய் யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்த இடங்கள் இருதலைப் பகரக்குறியிட்டுக் காட்டப் பெற்றுள்ளன**

44. பிரபந்த மரபியல், முன்னுரை, பக். 45.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/224&oldid=1571308" இலிருந்து மீள்விக்கப்பட்டது