உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

209

என்ற குறிப்புகளோடு, விடுபட்டுள்ள இடங்களை நிரப்பியுள்ளார் மு. அருணாசலம். பிற நூல் கருத்துகளும், பதிப்பாசிரியரின் நுட்பமும் துணை நிற்க, மீட்டுருவாக்கம் நடைபெற்றுள்ளதற்குப் பிரபந்த மரபியல் எடுத்துக் காட்டாகிறது.

2. பதிப்புரை

சுவடிப் பதிப்புகளை 1. பழைய பதிப்பு 2. திருத்தப் பதிப்பு 3. தெளிவுப் பதிப்பு 4. ஆராய்ச்சிப் பதிப்பு 5. தொகுப்புப் பதிப்பு 6. மறுபதிப்பு என ஆறு பிரிவுகளாக வகைப்படுத்திக் முடிகிறது.

அ.

பழைய பதிப்பு

காண

சுவடி வேறு அச்சுநூல் வேறு என்று பிரித்து அறிய முடியாத அமைப்பினை உடையவை. பாடல், அதன் கீழ் உரை என்ற பிரிப்பு முறையால் மட்டும் வேறுபட்டுக் காணப்படும்; பாடல் அடி களாகவோ அடிகள் சீர்களாகவோ பிரித்துக் காட்டாதவை பழைய பதிப்புகள். மூலம் மட்டுமுள்ள நூலாயின் பாடல்கள் மட்டும் தனித்தனியே எண்களிட்டுக் காட்டப்படுவதுண்டு; பாடலுக்குப் பாடல்கூட இடைவெளியிராது.

இராசகோபாலப்

பிள்ளையின் தொல்காப்பிய,

சொல்

லதிகாரப் பதிப்பினைப் பற்றி கு. சுந்தரமூர்த்தி கூறும் கூற்று இப்பழைய பதிப்பு முறையை எடுத்துக் காட்டும்.

இப்பதிப்பு, உரைகளையோ அன்றி நூற்பாக்களையோ கூடப் பிரித்துப் பதிப்பிக்காமல், நெடுங்கணக்காகவே பதிப்பிக் கப்பட்டிருந்தது"1

என்பது அக்கூற்று.

ஆ.

திருத்தப் பதிப்பு

"ஓர் இலக்கியத்தின் 'சுத்தப் பதிப்பு' பாடத்தில் காணும் ஐயங்களை நீக்கிப் பொருள் தெளிவு ஏற்பட வழி செய்ய வேண்டும். படிப்பவர்கள் தாமே பாடத்தை உறுதி செய்து கொள்வதற்காக எல்லாப் பிரதிகளிலும் காணும் பாடங்களை யும் ஒழுங்காகப் பிழையின்றிக் கொடுக்க வேண்டும்... இலக்கியத்தை அனுபவிப்பதற்குப் பாடத் தெளிவு மிகவும் இன்றியமையாதது

1. தொல். சொல். சேனாவரையம், பதிப்புரை.

2.

சில கட்டுரைகள், பக். 122. சுவ 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/225&oldid=1571309" இலிருந்து மீள்விக்கப்பட்டது