210
சுவடி இயல் என்னும் கருத்துப்படி அமைவது திருத்தப் பதிப்பு ஆகும். பழைய பதிப்பு முறைகளிலிருந்து இத்திருத்தப் பதிப்புமுறை அமைந்துள்ளது. பாடல்கள் தனித்தனி அடிகளாகப் பிரிக்கப்பட்டன. அடிகள் தோறும் ஓசை நயம் குன்றாமல் சீர்கள் பிரித்தமைக்கப்பட்டன. பாடவேறுபாடுகள்
சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து
சுட்டப்பட்டன.
இ. தெளிவுப் பதிப்பு
கடின சந்திகளைப்
பிரித்துப் பதிப்பிப்பதும், தெளிவுரை எழுதிப் பதிப்பிப்பதும் இப்பதிப்பு வகையைச் சாரும். இதனை எளிய பதிப்பு எனவும் கூறலாம். எனவும் கூறலாம். பல சுவடிகளை ஆய்ந்து, சிறந்த பாடத்தைத் தேர்ந்து சந்திகளைப் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் பதிப்புகள் இவ்வகைக்குச் சான்றுகளாகும்.
எஸ். ராஜம் வெளியீடு, சென்னை (தனித்தனி நூல்களாக) சங்க இலக்கியங்கள்-
திவ்யப் பிரபந்தம் - முதலாயிரம்
புதுவை பிரஞ்சு நிறுவனம்
- 1955
திருவாய் மொழி -1956
திருவாசகம்
- 1984
தேவாரம்
- 1984
ஆகியவை தெளிவுப் பதிப்புகளாகும். எஸ். ராஜம் வெளியீட்டினர் சங்க இலக்கியங்கள் உட்படச் சுமார் நாற்பது நூல்களை இவ்வாறு பதிப்பித்துள்ளனர்.
F.T..
ஆராய்ச்சிப் பதிப்பு
திருத்தப் பதிப்பு முறைகளோடு, நூலின் முழுத்தன்மையையும் ஆய்ந்து நூலில் காணப்படும் சிறப்புச் செய்திகள், நூலாசிரியர், உரையாசிரியர், பாட்டுடைத் தலைவர் ஆகியோர் வரலாறுகள், ஆய்வாளருக்குப் பயன்படும் அருஞ்சொல் முதலியவற்றின் அகரநிரல்கள், பதிப்பு வரலாறு ஆகிய பகுதிகளைக் கொண்டதாய் அமைவது ஆராய்ச்சிப் பதிப்பு ஆகும். பதிப்பித்த முறையாலும், ஆய்வாளருக்குப் பயன்படும் முறையாலும் இப்பெயர் பொருத்த முடையதாகிறது. உ. வே. சாமிநாதையரின் பதிப்புகள் பெரும் பான்மையும் இவ்வகையைச் சார்ந்தனவாகும். பதிப்பு
ப
வரலாற்றோடு மேலும் சிறப்புற அமைந்தவை என எஸ். வையா புரட்ஃபிள்ளையின் கீழ்க்காணும் பதிப்புகளைச் சுட்டலாம்.