உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

செந்தமிழ்ப் பிரசுரம் - 54

மதுரைத் தமிழ்ச் சங்க முத்திரசாலை GUIGU} ,}

-

211

1931

அரும்பொருள் விளக்க நிகண்டு களவியற்காரிகை - 1931

-

ஆசிரியரின் சொந்த வெளியீடு போன்ற பல பதிப்புகள் அவருடைய சிறந்த ஆராய்ச்சிப் பதிப்பு களாகும். மு. சண்முகம்பிள்ளையின் சுவடிப் பதிப்புகள் எஸ். வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு முறைகளைப் பின்பற்றியவை எனலாம். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பதிப்புகளுள் சில இவ்வகைக்குரியவையாகும். சான்றாக, கம்பராமாயணம்- தனித் தனி காண்டங்கள் (1960-63), யாப்பருங்கலக் காரிகை (1968), ஐங்குறு நூறு (1958) ஆகிய பதிப்புகளைச் சுட்டலாம்.

தொகுப்புப் பதிப்பு

இப்பதிப்பு முறையை இரண்டு வகைப் படுத்தலாம். 1. ஒரு பொருள் பற்றிய செய்திகள் பல சுவடிகளில் பலவகையாகக் காணப் படும்; அல்லது ஒரு சுவடியில் ஒரு பகுதியும் மற்றும் சில சுவடிகளில் அதே போல ஒவ்வொரு பகுதியுமாக ஒரு பொருள் பற்றிய செய்தி கள் பல சுவடிகளில் கிடைக்கலாம். இவற்றைத் தொகுத்துப் பயன் படுமளவில் ஒரு நூலில் பலவகைச் செய்திகளாகவும், ஒரு முழுமை யான நூலாகவும் பதிப்பிப்பது ஒருவகை. பிள்ளைப்பிணி வாகடம் (அரசினர் சுவடி நூலகம், சென்னை-1951) என்னும் நூலில் ஒரு நோய்க்குப் பல மருந்துகள் பல சுவடிகளிலிருந்து தொகுத்துக் கொடுக்கப்பட்டன. அனுபவ வைத்தியம் (அரசினர் சுவடி நூலகம், சென்னை-1956) சுரரோக சிகிச்சை (சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்) போல் வனவும் இவ்வகையின.

ஒவ்வொரு சுவடியிலும் ஒன்றிரண்டு செய்திகள் சிறப்பாகக் காணப்பட்டவற்றைத் தொகுத்து ஒரு பொருளுக்குரிய 12 தலைப்பு களைத் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட நூல் மனை நூல் ஆகும்.

8

2. ஒரு தலைப்பில் பல்வேறு பொருள்கள் காணப்படும்; அவை பல சுவடிகளில் காணப்படும். அவற்றைத் தொகுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுவது தொகுப்புப் பதிப்பில் இரண்டாவது வகையாகும். அகம், புறம் என்பன பொருளாலும் கலித்தொகை பாட்டாலும் குறுந்தொகை அளவாலும் அமைந்த தொகுப்புப்

3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 8191.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/227&oldid=1571311" இலிருந்து மீள்விக்கப்பட்டது