உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

பதிப்புகளாகும். ஆனால் சுவடி பட்டவை. பதிப்பு நிலைக்கு,

நிலையிலேயே

சுவடி இயல்

தொகுக்கப்

பிள்ளைத் தமிழ்க் கொத்து, அரசினர் சுவடி நூலகம்,

தூதுத் திரட்டு

சென்னை 1957

-

நிறுவனம்

கும்மிப் பாடல்கள், உலகத் தமிழாராய்ச்சி

- 1983

- 1982

ஊஞ்சல் இலக்கியம், ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம். பிள்ளைத்தமிழ் என்பது ஒரு வகை இலக்கியம். பல பாட்டுடைத் தலைவர்கள் மீது பாடப் பெற்ற பல பிள்ளைத் தமிழ்ச் சுவடிகளைத் தொகுத்து வெளியிடப் பட்டதே பிள்ளைத்தமிழ்க் கொத்து. பிறவும் இத்தகைய பதிப்பு களாகும்.

ஊ.

மறுபதிப்பு

முதலில் அச்சிட்ட நூல்கள் தீர்ந்துபோன நிலையில் மீண்டும் அச்சிடப்பெறுவது மறுபதிப்பு எனப்படுகிறது. இது பதிப்புத் தன்மையால் மறுஅச்சு எனவும் மறுபதிப்பு எனவும் இருவகைப் படும். இவற்றுள்,

இதில்

மறுஅச்சு : முதற்பதிப்பில் பெரிதும் மாற்றம் இல்லாதது; திருத்தம் இல்லாதது; சேர்க்கைகள், நீக்கல்கள் இல்லாதது; இவ்வாறு மீண்டும் அச்சிடும் பதிப்பு மறுஅச்சு எனப்படும், முதற்பதிப்பில் நிகழ்ந்த அச்சுப்பிழைகள். பிறவாகிய சிறுசிறு பிழைகள் திருத்தம் பெறுவதுண்டு.

மறுபதிப்பு : மறுபதிப்பில் நூலின் ஒவ்வொரு வரியும் படிக்கப் பெறும்; தேவையான திருத்தங்கள் செய்யப்பெறும்; ஒவ்வாத செய்திகள் நீக்கப்படலாம்; அப்பதிப்பிற்குப் பிறகு வேறு சுவடிகள், பிற சான்றோர் கருத்துகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த புதிய சேர்க்கைகள் இடம்பெறும்; கடிதங்களின் மூலம் கிடைத்த கிடைத்த தகுதி வாய்ந்த மாற்றங்கள் இடம்பெறும்; நூலில் இடம்பெற்ற நிகழ்ச்சி களுக்கேற்ற துணைச் சான்றுகள், படங்கள்,பிற விளக்கங்கள், ஆண்டுக் குறிப்புகள் சேர்க்கப்பெறும்; பதிப்பாசிரியரின் கருத்து வளர்ச்சிக் கேற்பவும், கிடைத்த புதிய நூல்களின் செய்திகளுக் கேற்பவும், ஆய்வு நெறி வளர்ச்சிக் கேற்பவும் புதிய ஆய்வு முன்னுரை அமைக்கப் பெறும்; துணை நூற் பட்டியல் திருத்தம் பெறும்; கலைச்சொல் பட்டியல் மாற்றம் பெறும். இத்தகு மாற் றங்கள் பெற்றுப் பதிப்பிக்கப் பெறுவது மறுபதிப்பு எனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/228&oldid=1571312" இலிருந்து மீள்விக்கப்பட்டது