உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

3. பதிப்புக்கலை முன்னோடிகள் தரும் பட்டறிவு

213

சுவடிப் பதிப்பினை மேற்கொண்டோர் பலர், ஆயினும் சிறந்த வழிகாட்டிகளாய் விளங்கியவர் சிலரே. சுவடிப் பதிப்பினைத் தொடங்கிய காலத்தில் பலவகை இன்னல்களை யடைந்தனர். இருந்தும் சுவடி தேடுதல், கருத்துத் திரட்டுதல், முன்னுரை, வரலாறு, உரை, சிறப்புரை ஆகியவை எழுதுதல்” அருஞ் சொல்லகராதி தயாரித்தல் போன்றவற்றில் வழிகாட்டி யுள்ளனர். பதிப்புக்கலையில் ஈடுபடுவோர் பெற வேண்டிய அவ்வனுபவங்களை இப்பகுதி ஆய்வு செய்கிறது.

சுவடிப் பதிப்பின் காலம்

4

6

சுவடிப் பதிப்புப் பணி தொடங்கி, வளர்ச்சியுற்ற காலம் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சுட்டலாம். கி. பி. 1812இல் திருக்குறள் அறத்துப் பாலினை, எஃப். டபிள்யூ. எல்லீஸ் என்பவர் சுவடியிலிருந்து எடுத்துப் பதிப்பித்தார் என்ற செய்தி கிடைக் கிறது * வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியின் பெயர், தொகை, தொடையகராதிப் பகுதிகள் 1824இல் தாண்டவராய முதலியார், இராமச்சந்திர கவிராயர் ஆகியோரால் சன்னைக் கல்விச் சங்கத்தில் பதிப்பிக்கப் பெற்றன. 1836இல் கோட்டை, கல்லூரிக் கல்விச் சங்கத்தின் சார்பில், புதுவை நயனப்ப முதலியார் தஞ்சை வாணன் கோவை, நேமிநாதம் மூலம் ஆகிய நூல்களை முழுமை யாகப் பதிப்பித்தார். 1838இல் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் திருக்குறளைச் சிறந்த உரையுடன் முழுமையாகப் பதிப்பித்தார். தாண்டவராய முதலியார் முதல் இன்றைய பதிப்புச் செம்மல் மு.சண்முகம்பிள்ளை ஈறாகப் பல பதிப்பாசிரியர் சுவடிப் பதிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தாடக்ககாலப் பதிப்பிள் முகப்பு : நூல் பதிப்பிக்கப்பட்ட முறை முதல் பக்கமாகிய நூல் தலைப்புப் பக்கத்தில் கூறப்பட்டு வந்தது. அதைத் தவிர வேறு வரலாறுகள் தொடக்ககாலப் பதிப்புகளில் இல்லை. இந்தத் தலைப்புப் பக்கத்திற்கு எடுததுக் காட்டாக ‘நைடதம் மூல பாடம்' என்னும் பதிப்பைக் காட்டலாம். பதிப்பாசிரியரின் ஆற்றலை மட்டும் கூறும் முன்னுரையும் அந்த நூலில் அமைகிறது.

4.

சம்

அச்சுக்கலை, பக் 234.

அச்சும் பதிப்பும், பக். 146, 201, 206 (பதிப்பாசிரியர் பட்டியல் பின்னிணைப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/229&oldid=1571313" இலிருந்து மீள்விக்கப்பட்டது