உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

ஆ. பதிப்புக் கலையில் வழிகாட்டியோர்

சுவடி இயல்

சுவடிப் பதிப்பை மேற்கொண்ட பதிப்பாசிரியர் பலர் காணப் பட்டாலும், பதிப்புப்பணியை ஒரு கலையாகக் கருதி, அக்கலையின் நுணுக்கங்களைத் தங்கள் அனுபவத்தின் மூலம் பிறருக்கு எடுத்துக் கூறி வழி காட்டியுள்ளோர் மிகச் சிலரே. அவருள்ளும் சி.வை, தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர், எஸ். வையாபுரிப் பிள்ளை ஆகிய மூவரின் பதிப்புரைகளே இங்கு பதிப்பு வழிகாட்டி களாகச் சுட்டப்படுகின்றன. சங்க இலக்கியப் பதிப்பை முதன் முதலில் மேற்கொண்ட பெருமையுடையவர் சி. வை. தா. ஆவார் (கலித் தொகை-1887.) சுவடிப் பதிப்பாக மட்டும் எழுபத்து நான்கு நூல்களைப் பதிப்பித்த பெருமையுடையவர் உ. வே. சா. பதிப்பு முறையில் புதிய பல திருத்தங்களை திருத்தங்களை மேற்கொண்ட பெருமைக் குரியவர் வையாபுரிப்பிள்ளை. இம்மூவரின் அனுபவங்கள் பதிப்புப் பணி வழிகாட்டிகளாக

மேற்கொள்ளுவோருக்குப்போதுமான அமையுமாதலின் அவை மட்டும் இங்கு இங்கு எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன.

பதிப்பில் பழைய இன்னல் : மேற்குறிப்பிட்ட

பதிப்பாசிரி யர்கள் பதிப்புப் பணியினை மேற்கொண்டபோது ஏடுபடித்தல் என்னும் வழக்காறு குறைந்துவிட்டது. அதனால் ஏடு கிடைப்பது அரிதாயிற்று. புலவர், பெருஞ்செல்வர் போன்றோர் வீடுதோறும் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. சுவடிகளில் காணப்படும் நூல் களின் பெயர்கள்கூட அறியப்படாமல் இருந்தது. எட்டுத் தொகை நூல்கள் யாவை என்பதை அறியாத நிலை இருந்தது. சிலப்பதி காரமா? சிறப்பதிகாரமா? என மயங்கிய காலம் அது. சீவகசிந்தா

மணி என்ற காவியத்தின் பெயரை உ.வே.சா. அவர்களே அறியா திருந்த காலம். பதிப்புச் செலவு மிகக் குறைவாக இருந்தது. பதினாறு பச்சங்கள் கொண்ட பாரத்திற்கு அச்சுக்கூலி மூன்றரை ரூபாயாக இருந்தது." இருந்தும் நூல்கள் விற்பனை யாகாமல் பொருட் செலவால் பதிப்பாசிரியர் தொல்லைபட்டனர்.

"...ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதில், புத்தகங்கள் விலை போகாமல் நேரிடும் நஷ்டத்தைக் குறித்து விய வருஷம் ஆடி மாதம் ஹிந்து பத்திரிகை வாயிலாக ஓர் அபயம் எழுதித் தமிழபிமானமும் தரும சிந்தையுமுடைய பிரபுக்கள் என் நஷ்டத்தை நன்கொடை முதலிய சகாயஞ் செய்து பரிகரிக்குமாறு வேண்டிக்கொண்டேன்””

6. என் சரித்திரம். பக். 797, 7. தொல், எழுத்து பதிப்புரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/230&oldid=1571314" இலிருந்து மீள்விக்கப்பட்டது