உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

இதனைப் பதிப்பித்தலின் அச்சிற்குங்

215

காகிதத்திற்கும்

நூல்

வந்த செலவினும், பரிசோதனைச் செலவு இருமடங்கிற்கு மேலே சென்றதாகலானும், இப்பெயர் பெற்ற அரிய களைப் படிக்க விரும்பி வாங்குவோர் சிலரே யாதலானும் இதுவித முயறிசியிற் கையிடுவது முதலுக்கே நஷ்டத்தை விளைவிக்கின்றது... இதுவரை பதிப்பித்த நூல்களால் எனக் குண்டான நஷ்டங் கொஞ்சமன்று”8

கண்டனங்கள்

என்று கூறும் சி.வை.தா. அவர்களின் கூற்றுகள் பதிப்பாசிரியருக் கேற்பட்ட நட்டத்தை நினைவூட்டுகின்றன.பதிப்பாசிரியர் மீது பல வெளியான காலம் அது. கண்டன செய்தி களைப் பார்த்து உ.வே.சா. வேண்டியவற்றைக் குறித்துக் கொள்ளு வார். மறுப்பு எழுதுவதை விட்டுவிட்டார்,

தமிழ் நூல்களை, தமிழ்நூல் வெளியீட்டாளரை ஆங்கிலம் கற்ற தமிழர்கள் அலட்சியம் செய்து வந்தார்கள்; தமிழ்ப் புலவர் களும் பொறாமைக் காரணத்தால் எள்ளியும் எதிர்த்தும் வந்தார்கள். இத்தகு இன்னல்கள் பல பதிப்பாசிரியருக்கு இருந்து வந்தன என்பதைப் பதிப்பாசிரியர் பலரின் பதிப்புரைகள் தெரிவிக் கின்றன.

இவர்கள் அந்நிய மொழிகளைத் தங்கள் தாய்மொழி யாகவே கருதினர்; தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்த லைச் செய்கனர். ஆனால் ஒருசிலர் இவர்களுக்கு விலக்காய் அமைந்து தாய்மொழியாகிய தமிழையும், அதன் இலக்கியங் களையும் போற்றி வரலாயினர். இச்சிலருள் ஒருவர் ஸ்ரீராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையாவார்கள்10 என்பது பதிப்பாசிரியரின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகும்.

பதிப்பாசிரியரிடை மனவேறுபாடு

'பிறரால் ஒன்றும் காண முடியாதபடி தனியாக அமைந்த ஓர் அறையில்...நூல் பரிசோதனையைச் செய்து வரலாயினர்.

ஏட்டுப் பிரதிகளேயன்றி இவர்கள் படித்து வந்த அச்சுப் புத்தகங்களைக்கூட இரவல் வாங்க முடியாது... விலக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டால்தான் இவர் 2.தவுவார். தொல்;பொருள்,பதிப்புரை.

8.

9. தமிழ்ச் சுடர்மணிகள், பக்.297.

10.

தமிழ்ச் சுடர்மணிகள், பக். 229,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/231&oldid=1571315" இலிருந்து மீள்விக்கப்பட்டது