உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

சுவடி இயல்

அவ்வாறு தரும் பிரதிகளும் பெரும்பாலும் பயனற்றனவாகவே இருக்கும்...

தாம் உதவாதது மாத்திரமேயன்றி, பிற பேரறிஞர்களும் நூலைப் பதிப்பிடுவோர்க்கு உதவுதல் கூடாது என்று கடிந் துரைத்ததை நான் நன்கு அறிவேன்1'

என்னும் எஸ். வையாபுரிப் பிள்ளையின் கூற்றுகள் பதிப்பாசிரிய ரிடையேயும் மனவேறுபாடுகள் இருந்தன என்பதைப் புலப்படுத்து கின்றன.

சுவடி தேடிய பணி : சுவடி தேடித் திரிந்த பதிப்புக்கலை முன்னோடிகள் பலரின் அனுபவங்கள் நமக்கு ஊக்கமூட்டுவன

வாகும்.

U

விருஷபதாச முதலியார் என்பவர் வீட்டில் பல பழைய ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்று தெரிய வந்தது. சுவடிகள் தேடும் யாத்திரையை அப்பொழுது தொடங்கினேன்; இன்னும் ஓயவில்லை. ...இவ்வாறு பலவகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப் பிரதிகள் 23 கிடைத்தன'

"திருச்சிராப்பள்ளியிலிருந்து குழித்தலை சென்று அதன் அருகிலுள்ள ஊர்களில் ஏடுகளைத் தேடினேன். எனக்கு உதவியாக ஒன்றும் கிடைக்கவில்லை. அப்படியே சேலத்தை அடைந்தேன்” 18

என்பவை முன்னோடிகளின் உழைப்பை எடுத்துக் காட்டுபவை யாகும். சுவடி தேடுவதில் பெரிதும் உழைத்த உ.வே.சா சிந்தாமணிப் பதிப்புக்கு இருபத்து மூன்று சுவடிகளைத் திரட்டி யிருக்கிறார். சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரைச் சுவடியி லிருந்த ஐயங்களைப் போக்கிக் கொள்ள மேலும் சுவடி தேடி ஐம்பது ஊர்களுக்கு மேல் பயணம் செய்திருக்கிறார் என்னும் செய்திகள் சுவடி திரட்டுவதில் ஊக்கமளிப்பனவாகும்.

14

மூலநூல் பதிப்பு : முதலில் மூலநூல்கள் மட்டும் அமைந்த பதிப்புகளே மிகுதியாகத் தோன்றின. திருத்தொண்டர் புராணம் முதலாய புராணங்கள், தேவாரம், திருவாசகம், 11. மேற்படி, பக். 297-99.

12.

என் சரித்திரம், பக். 766. 13. மேற்படி, பக். 921.

14. மேற்படி, பக்.705.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/232&oldid=1571316" இலிருந்து மீள்விக்கப்பட்டது