உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் போன்ற நேமிநாதம், தஞ்சைவாணன் கோவை

217

சமயப் பாசுரங்கள்,

. ஆகிய

இலக்கண இலக்கியங்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை போன்ற சிறு நூல்கள் உரையின்றி பதிப்பிக்கப்பட்டன.

மூலம் மட்டுமுள்ள பதிப்பின் பயன் : திருக்குடந்தைப் புராணத்தைப் பதிப்பித்த உ.வே.சா. அவர்கள் "மூலத்தை மாத்திரம் ஒழுங்கு செய்து அச்சிட்டு வந்தோம். குறிப்புரையுடன் வெளியிட்டால்தான் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கு மென்ற கருத்து அப்போது எனக்கு எழவில்லை' என்று

கூறுவார்.15 இது, மூலம் மட்டும் அடங்கிய நூலைப் பதிப்பிப்பதில் பயனில்லை என்ற அனுபவத்தை அளிப்பதாகும். ஆனால் உரை நூல்கள் பல பதிப்பிக்கப்பட்ட பின்பு. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) என்னும் நூல் இரண்டு பகுதிகளாக 1940இல் வெளி யாயிற்று. இது சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பு. மூலம் மட்டும் அடங்கிய பதிப்பாயினும் புலவர் வாரியாகத் தொகுக்கப் பட்டது ஆதலின் குறிப்பிட்ட ஒரு புலவரின் பாடல் திறனறியப் பெரிதும் பயன்படுவதாகும், இம்முறை மேலும் பாடல்களைத் திணைவாரியாகவும், தலைவன், தலைவி, தோழி, தாய் ஆகியோர் கூற்றுவாரியாகவும் பகுத்துப் பதிப்பிக்க வழிகாட்டியாக அமைகிறது. கற்றவர் குறிப்புக்குக் கையடக்கமாக அமைதலின் மூலம் மட்டும் அடங்கிய எஸ். ராஜம் வெளியீடுகள் (மர்ரே பதிப்பு) மறுபதிப்பு களாகவும் வெளியாயின. பண்முறையாகவும், தலமுறையாகவும் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட மூவர் தேவாரம் வழக்காற்றில் பயன்படும் நூல்களாகும். ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் ஒருவர் பல சமயத்தில் பாடிய பாடல்கள், இருவர், மூவர் பாடிய பாடல்கள் ஆகியவை ஒருசேரக் கண்டு ஓதுதல் வேண்டும் என்ற நோக்கத்தால் உமாபதிசிவம் காலத்தில் தோன்றியது தேவாரத் தலமுறைத் தொகுப்பு. தொல்காப்பியம் முதலான ஐந்திலக்கண நூல்கள், திருக்குறள் முதலிய இலக்கியங்கள் மூலம் மட்டுமே பதிப்பிக்கும் முறை பிற்காலத்தும் தோன்றியது. கையடக்கமாக வைத்து மனப்பாடம் செய்யவும், அவ்வப்போது தோன்றும் ஐயங் களைப் போக்கிக் கொள்ளவும் பயன்படுவது இப்பதிப்பு.

1

15.

16.

என் சரித்திரம், பக். 753. தேவாரம், முன்னுரை, பக். 80.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/233&oldid=1571317" இலிருந்து மீள்விக்கப்பட்டது