உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இ. முன்னோடிகள் கருத்துத் திரட்டிய முறை

சுவடி இயல்

சுவடிப் பதிப்பில் குறிப்புரை முதலான விளக்கங்களை எழுதுவது பதிப்பாசிரியரின் பணியாகும். சில தொடர்களுக்கான சிறந்த விளக்கங்களை எழுத, பலவகையிலும் செய்திகளைத் அனுபவங்கள் பின்பற்றத்

திரட்டியுள்ள பதிப்பாசிரியரின் தகுந்தவையாகின்றன.

மணிமேகலையைப் பதிப்பிக்க எண்ணினார் உ. வே. சாமி நாதையர். பெளத்த சமயக் கருத்துகள் பலவற்றையும் ரங்காச் சாரியார் என்பவரிடம் ஐந்து ஆண்டுகளாகக் கேட்டுத் தொகுத்து வந்தார். அதனால் அந்நூல் பதிப்பு நன்றாக அமைந்தது.'

இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்”18

17

என்ற அடிக்கு 'உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனு மல்லேன்; உயிரை நீத்தேனுமல்லேன் என்று கருதி மரத்தினேன் என்றார்" என்று உரை எழுதினார் நச்சினார்க்கினியர். இதன் விளக்கத்தைத் தம் அனுபவத்தால் அறிந்து 'இடையன் எறிந்த மரம்' என்னும் கட்டுரையாக எழுதியிருக்கிறார் உ.வே.சா. இடையன் வெட்டு அறா வெட்டு' என்ற பழமொழியையும் எடுத்துக் காட்டுகிறார்.

திருச்சிற்றம்பலக்

சீவகசிந்தாமணியின்

கோவையின் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் என்பதைப் பலர் வாயிலாக அறிந்தார் உ.வே.சா. முதற்பதிப்பில் அதைச் சுட்டினார். வெள்ளூர்க் கவிராயர் வீட்டில் இருந்த அந்நூற்சுவடி ஒன்றின்மேல் அவ்வுரை பேராசிரியருடையது என்ற குறிப்பு இருந்தது

நச்சினார்க்கினியர் திருச்சிற்றம்பலக் கோவைக்கு உரை எழுதினார் என்ற கருத்தை உடனே மாற்றிக் கொண்டார்.*0

திருத்தக்கதேவர் வரலாற்றை எழுத ஒரு குறிப்பும் கிடைக்காத நிலையில் உ.வே.சா. சமணர்களிடம் கர்ண பரம்பரையாக வழங்கி வந்த செய்திகளைக் கேட்டறிந்து அவற்றைக் கோவைப்படுத்தி

அவ்வரலாற்றை எழுதினார்.21

17. நினைவு மஞ்சரி-1, பக்.22. 18. சீவகசிந்தாமணி, 1914.

19.

20.

நினைவு மஞ்சரி-1, பக். 33-35.

என் சரித்திரம், பக். 887. 21. மேற்படி, பக்.836.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/234&oldid=1571318" இலிருந்து மீள்விக்கப்பட்டது