உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

மணிமேகலையில்

பொருளறிய முயன்று

உ.வே.சா.

22

219

வரும் பிடமர் என்ற சொல்லுக்குப் மளூர் ரங்காச்சாரியர் மூலம் அறிந்தார்

சூளாமணி என்னும் நூலைப் பதிப்பித்தபோது சி.வை.தா.வுக்கு ஆருகத சமயக் கோட்பாடுகள், தத்துவ பேதங்கள், புராணக் கதைகள்... ஆகியவற்றில் ஐயங்கள் ஏற்பட்டன. அதற்காக வீடூர் வித்துவான் அப்பாசாமி சாஸ்திரியை வரவழைத்து மூன்று மாதம் உடன் தங்கச் செய்து ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் சென்ற பிறகு ஏற்பட்ட ஐயங்களைக் கடிதம் எழுதியும் தெரிந்து கொண்டார்.28

கருத்துக்களைத் திரட்டுவதில் முன்னோடிகள் எடுத்துக்கொண்ட இம் முயற்சிகள் ஊக்கமளித்து அவ்வழியில் தூண்டுவனவாகும். கிடைக்கும் பலவகை நூல்களை ஆய்வதிலும், அறிஞர்களைக் கலந்து கருத்துரை பெறுவதிலும் ஊக்கம் காட்டினால் பதிப்புகள் சிறப்புற அமைதல் திண்ணம்.

FF.

முன்னோடிகளின் முன்னுரை

"அக்காலத்தில் அச்சிடப்பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் பலவற்றில் முகவுரை முதலியன காணப்படவில்லை. அவை இருந்தால் படிப்பவர்களுக்கு மிக்க மிக்க உபயோகமாக இருக்கு மென்பதை உணர்ந்த நான் சிந்தாமணிக்கு அங்கமாக அவற்றை எழுதிச் சேர்த்துப் பதிப்பிக்கலாமென்று எண்ணி னேன்... நூலைப் படிப்பதற்கு முன் அதிலுள்ள முக்கியமான விஷயங்களையும் நூலின் பெருமையையும் உரையின் தன்மை முதலியவற்றையும் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளுவது நல மென்பது எனது கருத்து” என்பர் உ.வே.சா.2*

1887இல் பதிப்பித்த சீவகசிந்தாமணியில் முன்னுரை எழுதிய உ.வே.சா. அடுத்த பதிப்புகளில் பலவகைப்பட்ட ஆய்வுரைகளைத் தந்துள்ளார். ஆனால் 1881இல் வீரசோழியம் என்னும் நூலைப் பதிப்பித்த சி.வை.தா. அந்நூலில் முப்பது பக்க அளவில் ஆய்வு முன்னுரையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போல கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி பதிப்புகளிலும் சிறந்த ஆய்வுரைகளைப் தந்துள்ளார்.

22. நினைவு மஞ்சரி-1, பக். 20.

23.

தே

ஆகிய

பதிப்புரைகளாகத்

சூளாமணி,பதிப்புரை. 24. என் சரித்திரம், பக்.835.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/235&oldid=1571319" இலிருந்து மீள்விக்கப்பட்டது