உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

சுவடி இயல் நூலுக்குப் புறம்பான, ஆனால் நூற்பொருளோடு தொடர் புடைய பல செய்திகளையும் விரிவாக ஆய்ந்து, பிறகு நூற் பொருளை ஆய்ந்து கூறுவன சி.வை.தா.வின் பதிப்புரைகள். நூற்பொருளை முதற்பத்தியிலேயே தொடங்குவன உ.வே.சா.வின் முன்னுரைகள்.

தமிழும் சமஸ்கிருதமும்,தமிழ் என்னும் சொல். தமிழ்மொழி, அபோத காலம், அட்சரகாலம், இலக்கணகாலம், சமுதாயகாலம், அநாதாரகாலம், சமணர் காலம், இதிகாச காலம், ஆதீன காலம் ஆகிய செய்திகளை வரன்முறையாக ஆய்ந்து, தக்க சான்று காட்டி நிறுவிய பிறகு இந்நூலின் காலம் இந்நூலின் காலம் என்ற தலைப்பை எடுத்துக் கொள்ளுகிறார் சி.வை.தா. (வீரசோழியப் பதிப்புரை.1881).

"...உத்தமர் புகழுமிப் பத்துப் பாட்டும், பாண்டி வளநாட்டில் மதுரைப்பதியில்... தமிழாராய்ந்த மகிமை பொருந்திய நக்கீரனார் முதலிய நல்லிசைப் புலவர்களால் அருளிச் செய்யப்பட்டு அச் சான்றோராலேயே தொகுக்கப் பட்டவை

2 5

"புறநானூ றென்பது... கடைச்சங்கப் புலவர்கள் அருளிச் செய்த எட்டுத் தொகையுள் ஒன்று”.26

"பதிற்றுப்பத்து என்பது... நல்லிசைப் சங்கச் செய்யுட்களாகிய எட்டுத்

செய்த

நான்காவது’” 2 +

T

புலவர்களருளிச் தொகைகளில்

என்பன உ.வே.சா. பதிப்புரைகளின் தொடக்கங்கள்.

நூலுக்காம் சொற்பொருள், அந்நூல்களின் வகை, நூலின் காலம், நூலாசிரியர், சுவடிகள், பதிப்பு முயற்சிகள் என்னும் வகை யில் புதிய வரன்முறைகளைத் தேர்ந்து, முன்னுரைகளை அமைத்துக் காட்டியவர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஆவார்.

23

அவை

"முற்காலத்தே தமிழ் கற்கப் புகுந்தார் லக்கணம், நிகண்டு என்ற இருவகைக் கருவி நூல்களைக் கையாண்டு வந்தனர். நிகண்டுகளில் ஒருசில ஒவ்வொரு பொருளுக்குமுரிய பல பெயர்களையும் நெறிமுறையே கூறிச் செல்வன. ஒருபொருட் பல்பெயர்த் தொகுதி எனப்படும்' 25. பத்துப்பாட்டு, முகவுரை (முதற்பதிப்பு-1889). புறநானூறு, முகவுரை (முதற்பதிப்பு-1894), பதிற்றுப்பத்து, முகவுரை (முதற்பதிப்பு-1904). 28. அரும்பொருள் விளக்க நிகண்டு முன்னுரை.

26.

27.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/236&oldid=1571320" இலிருந்து மீள்விக்கப்பட்டது