உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

221

எனப் பொருள் விளக்கத்தோடு பகுத்துக் காட்டுகிற முறையைக் கையாண்டவர் எஸ். வையாபுரிப் பிள்ளை.

நூலால் அறியப்படும் செய்திகளாக, முதல், கரு, உரி ஆகிய பொருள், நாடு, ஊர், இடம், தாவரம், பிராணி, கருவி, ஊர்தி, உணவு, நீதி, உபகாரிகள், சாதி, ஆடவர், மகளிர், வழக்கங்கள், வாழ்க்கை, அரசியல், நிமித்தம் ஆகிய பலவகைச் பலவகைச் செய்திகளின் தொகுப்பும், மொழி அமைப்பாசு, இலக்கணச் செய்திகள், நால்வகைச் சொற்கள், வடசொற்கள், உவமைகள் ஆகியவற்றின் சிறப்பும் நூலைப் பற்றிய ஆய்வுரைகளாக, முன்னோடிகளின் பதிப்புகளில் காணப்படுகின்றன.

29

நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு,பாடினோர், பாடப்பட்டோர் வரலாறுகள் ஆகிய வரலாறுகள் அமைகின்றன. நூலுடைத் தலைவனின் செய்திகள் பலவாறு விளக்கப்பட்டுள்ளன. சான்றாக, சீவகன் சரித்திரச் சுருக்கத்தைக் கூறி, ஸ்ரீபுராணத்துள்ள சீவக சரித்திரத்தோடு ஒப்பிடப்படுகிறது. நூலில் காணப்படும் செய்திகளுக்கும் தொடர்களுக்கும் ஒப்புமையான பிற நூல்களின் செய்திகளும் தொடர்களும் எடுத்துக் காட்டப்படும் இடங்கள் பதிப்பாசிரியரின் பரந்த நூலறிவையும், ஆழ்ந்த நினைவாற்றலை

யும் புலப்படுத்துகின்றன.

பிற பதிப்பாசிரியரின் பழைய பதிப்புகளில் இல்லாத செய்யுள் முதற்குறிப்பு, அருஞ்சொல் அகரநிரல் போன்றவையும் இப்பதிப்பு களில் அமைகின்றன.

உ.

பாடினோர் வரலாறு

முன்னோடிகளில் ஒருவரான உ.வே.சா. பாடினோர், பாடப் பட்டோர் வரலாறுகளைத் தொகுத்தளித்தது போலவே தொகுத் தவர், தொகுப்பித்தவர் வரலாறுகளையும் (ஐங்குறுநூறு), இசை வகுத்தோர் பற்றிய குறிப்புகளையும் (பரிபாடல்) ஆய்ந்தளித் துள்ளமை பதிப்பாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகிறது. இவை சொந்த முயற்சியால் உருவானவையாதலின் தோறும் வளர்ச்சி பெற்றுள்ள நிலை உருவாகியுள்ளது. யாசத் தரும் அனுபவத்தை அளிக்கிறது. பாடினோர் பெயர்க் 29. புறநானூறு சீவகசிந்தாமணி, குறுந்தொகை உயே சா.வின் பதிப்புகள்.

பதிப்பு

முழுமை

ஆகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/237&oldid=1571321" இலிருந்து மீள்விக்கப்பட்டது