உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

சுவடி இயல்

காரணங்களைப் பல்லாற்றானும் சிந்திக்குமாறு பொருத்திக் காட்டு கிறார் உ.வே.சா. பிற நூல்களில் அவர்கள் பாடிய பகுதிகளையும் சுட்டுகிறார்.

அரிசில் கிழார் - கொள்ளிடத்தின் வடபால் அரியிலூர் அல்லது அரியில் என்று வழங்கும் ஓரூரின் பெயர் அரிசில் என்பதன் மரூஉவாகக் கருதப்படுகிறது; சகரயகரங்கள் தம்முள் மயங்குவது இயல்பு... கிழார்-உரியவர்... வேளாண் மரபினர்'.

அள்ளூர் நன்முல்லையார்- அள்ளூரென்பது

பாண்டி

நாட்டில் மருத நிலத்தின் கண்ணதோரூர். இது கொற்றச் செழியன், பிண்டநெல்லி னள்ளூரன்னவென் னொண்டொடி (அகநா. 46) என்னும் இவர் பாடலால் விளங்குகிறது".

"உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - முதுகண் என்பது பிராயத்தாலும் அறிவாலும் முதிர்ந்து, அரசர்க்கும் பட்டத் தேவிகளுக்கும் உசாத் துணையாகவிருந்து, நீதிகளைச் செவியறிவுறுத்தும் ஆண்பாலார் பெண்பாலார்களுக்குரிய பெயராகச் சிலாசாசன முதலியவற்றிற் காணப்படுகிறது... இவர் உறையூர் அரசர்பால் அத்தொழிலை உடையவராக இருந்தார் போலும்".

து

கள்ளில் ஆத்திரையனார் கள்ளில் ஓரூர்; இது தொண்டை நாட்டிலுள்ளதும் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம். ஆத்திரையன் - அத்திரி குலத்திற் பிறந்தவன். இவர்க்கு இப்பெயர் குடிப்பெயர்"

என்பன போன்ற பல பெயர்க்காரணங்கள் பதிப்பாசிரியரின்

ஆற்றலால் பிறந்தவை பிற பதிப்பாசிரியருக்கு ஊக்கமூட்டி வழி காட்டுபவை.

உரை

முன்னோடிகளின் உரை, சிறப்புரைகள்: உரையில்லாத சுவடி களைப் பதிப்பிக்கும்போது பதிப்பாசிரியர் சிறந்த விளக்கத்தைத் தரவேண்டும் என்பதற்கும் முன்னோடியர் வழி காட்டியுள்ளனர். சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன. முறைப்படுத்தி தேவையான விளக்கங்களைத் தந்துள்ள முறை காணப்படுகிறது. உ வே சா. எழுதியுள்ள குறுந்தொகை உரை உரை முழுமையான வழி 30 புறநானூறு, பாடினோர் வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/238&oldid=1571322" இலிருந்து மீள்விக்கப்பட்டது