உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

223

காட்டியாகிறது. உரைகளில் காணப்படும் மேற்கோள்களை விளக்குவதோடு இடம் சுட்டிக் காட்டுதலும், இடம் விளங்கா மேற் கோள்களைப் பிரித்துக் காட்டுதலும் பதிப்புக் கலைக்குப் பயன் படுவதாகும்.

பதிப்பாசிரியர் சிலரின் பதிப்பு அனுபவங்களைத் துணையாகக் கொண்டு, சுவடிப் பதிப்புகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை நிரல்படுத்திக் காட்டுவது பயனுடையதாகும். இவ்வனு பவங்களைப் பின்பற்றும்போது,

'பதிப்புப் பணியில் உ. வே. சாமிநாதையர் பழைய முறையைப் பின்பற்றியவர் என்றால், வையாபுரிப் பிள்ளை புதுமுறையைப் பின்பற்ற ஆயத்தம் செய்தவர் எனலாம்'81 அவர்களின் கருத்தையும்

என்னும் உட்கொள்ள வேண்டும்.

4.

வி.ஐ.சுப்பிரமணியம்

பதிப்புப் பணிகள்

பதிப்புக்கலை முன்னோடிகளின் அனுபவங்களோடு பதிப்புப் பணியினை மேற்கொள்ளும் நமக்குச் சில எளிய வழிவகைகள் கிடைக்கின்றன. அச்சுப்படி தயாரிப்பதை முதலிலேயே தூய்மை யாகச் செய்ய முடிகிறது. சீர்களையும் சொற்களையும் முறையே ஓசையும் பொருளும் தோன்ற பிரித்து அமைக்க வழி கிடைத் துள்ளது. முறையான நிறுத்தற் குறிகளை அமைத்து, பொருட் புலப்பாட்டினை உண்டாக்க முடிகிறது. மேற்கோள், அடிக் குறிப்பு, ஆய்வடங்கல், சொல்லடைவு ஆகியவற்றை அமைத்து, பதிப்பினைச் செம்மை செய்ய முன்னோடிகளின் அனுபவம் துணை புரிகிறது. இத்தகு அனுபவங்களோடு சுவடிப் பதிப்பில் இம்முறை களைக் கையாளும் வழிவகைகளை இப்பகுதி ஆய்வு செய்கிறது.

அச்சுப்படி தயாரித்தல் : அச்சகத்திற்கு அனுப்பப்பெறும் தூய படி அச்சுப்படி எனப்படும். எல்லாவகையான திருத்தங்களுக்குப் பிறக இப்படியினைத் தயாரித்தல் வேண்டும். அடித்தல், திருத்தல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வரிப் பிளப்புக்களாகச் சிறிய எழுத்தில் எழுதிப் புகுத்துதல் கூடாது. பக்கக் கோட்டில் எழுதிச் சேர்த்தலும் அம்புக் குறிகளிட்டு ஆங்காங்கு சேர்க்குமாறு காட்டுதலும் இல்லாமல் பார்த்துக்

31. சில ட்டுரைகள், பக் 122.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/239&oldid=1571323" இலிருந்து மீள்விக்கப்பட்டது