உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

கொள்ள

சுவடி இயல்

வேண்டும். இவை அச்சுக் கோப்பவரைத் திணறச் சய்யும். அச்சுத் தாள்கள் வந்த பிறகு அவற்றில் சில தொடர் களையோ வரிகளையோ சேர்த்து அனுப்புதல் அல்லது நீக்கி யனுப்புதல் ஆகியவை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுவது

நல்லது.

பிரித்து அமைத்தல் : சொற்களை அல்லது சீர்களை இடை வெளிவிட்டுப் பிரித்துக் காட்டவேண்டும். அவ்வாறு தூய படியில் காட்டாமல் அச்சுத்தாள் வந்த பிறகு அதில் சில இடங்களைப் பிரித்து அமைக்குமாறும், சில சொற்களைச் சேர்த்து அமைக்கு மாறும் குறியீடுகளின் மூலம் கட்டளை இடுவது கூடாது. ஒவ்வொரு பக்கமும் வரிகள் ஒரே அளவில் அமையுமாறு எழுதுவது அச்சில் எவ்வளவு பக்கமாகும் என்று கணக்கிடவும், பிரித்துச் சீர்மை செய்யவும் உதவியாக இருக்கும்.

நிறுத்தற்குறி : காற்புள்ளி முதல் அடைப்புக்குறி ஈறாக அனைத்து நிறுத்தற் குறிகளையும் தெளிவாகக் குறித்துக் காட்ட வேண்டும். வரிகளைத் தொடர்ச்சியாக எழுதிவிட்டு அச்சுத்தாள் வந்த பிறகு ஆங்காங்கு குறியிட்டுக் காட்டி, நிறுத்தற் குறிகளைச் சேர்க்கச் செய்வது 'பதிப்பு அறம்' ஆகாது.

அடிக்

தலைப்பு : இயல் தலைப்பு, உட்பிரிவுத் தலைப்பு, ஆகிய வற்றைத் தெளிவாக எழுதி அடிக் கோடிடுவது அவசியம். குறிப்புகளைத் தனியே பிரித்து எழுதி அமைக்க வேண்டும். தூய படியின் இருபுறமும் சுமார் மூன்று செ.மீ. அளவு பக்கக் கோடுவிட்டு எழுதி, இடதுபுறப் பக்கக் கோட்டில் மேற்கூறிய தலைப்புகள் பாடல் அல்லது உரைநடைப்பகுதி, அடிக்குறிப்பு ஆகியவை எந்தெந்த அச்சுப் புள்ளிகளில் அமைய வேண்டும் என்பதை வேறு நிற மையினால் குறிப்பிட வேண்டும். சான்றாக இயல் தலைப்பு வரிக்கு நேரே இடப்புறப் பக்கக் கோட்டில் 14 புள்ளி' எனவும், பத்தித் தலைப்புக்கு நேரே '12 புள்ளி' எனவும், அடிக்குறிப்பு வரிகளுக்கு நேரே '8 புள்ளி' எனவும் குறிக்கவேண்டும். பாடல், உரைநடை போன்ற பகுதிகளுக்குப் பொதுவாக அச்சுப்புள்ளிகளை முதற் பக்கத்தில் குறிப்பிட்டால் போதும். அடிக்கோடு இடும் டங்கள், தடித்த எழுத்தில் அமையும் சொற்கள் ஆகியவற்றையும் தளிவாக வேறு நிற மையினால் குறித்துக் காட்டவேண்டும்.

3

படங்கள் : படங்கள், அட்டவணைகள், ஆகியவை இருப்பின் அச்சுப்படியின் இறுதியில் இணைத்து அவற்றிற்கு 1, 2, 3 என எண் கொடுத்து, அவை எந்தெந்தப் பகுதியில் அமையவேண்டும் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/240&oldid=1571324" இலிருந்து மீள்விக்கப்பட்டது