உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

225

குறிப்பை அடிப்பாகத்தில் எழுதிவிட வேண்டும். நூலின் உட்பகுதி யிலும் அவை அமைய வேண்டிய இடத்தில் படம் 1, அட்டவணை 1 அமைக்க என்ற குறிப்பைத் தருதல் வேண்டும்.

பக்க எண் : எழுதிய அச்சுப்படியினை மொத்தமாகச் சேர்த்துப் புத்தகம் போலத் தைத்து விடுதல் கூடாது. தலைப்பில் தைப்பதோ, கோத்துவிடுவதோ செய்தல் வேண்டும். அச்சுக் கோப்பவருக்குத் தனித்தனித் தாளாக எடுத்துக் கொடுக்குமாறு அமையவேண்டும். கோத்து ஒழுங்கு செய்த பிறகு கடைசிவரை முறையாகப் பக்க எண் கொடுப்பது அவசியம். பிரித்துக் கொடுத்து, மீண்டும் தொகுக்க அதுவே துணைபுரியும்.

முடிவு : இவ்வாறு தெளிவாக அமையும் அச்சுப்படியின் உதவி யால் அச்சுக் கோப்பது எளிமையாகிறது; தவறு குறைகிறது; அச்சுத்தாள் (மெய்ப்பு) திருத்துவதில் கடினம் ஏற்படுவதில்லை; மீண்டும் மீண்டும் அச்சுத்தாள் பார்க்க வேண்டிய அவசியம் இராது; அச்சுக் கோக்கும் பணியும், திருத்தும் பணியும் ஒருசேர விரைவில் முடிவு பெறும்.

அ.

பிரிப்புமுறை - பழந்தமிழ் இலக்கியம் பரவாமை கல்வி அறிவும் படிக்கும் பழக்கமும் பெருகி வருவது வருவது இவ் ருபதாம் நூற்றாண்டு. நூற்றாண்டு. ஆயினும் பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களிடையே பரவிப் பயன்தரவில்லை. காரணம் என்ன? அவை செய்யுள் நடையில் அமைந்துள்ளன; அவற்றின் பொருளை எளிமை உணர்ந்துகொள்ளுமாறு அவை பதிப்பிக்கப் பெறவில்லை.

யாக கடின

சந்திகளுங்கூடப் பிரிக்கப்படவில்லை; ஓரளவு தமிழ் பயின்றவர் அவற்றைத் தாமே துய்க்க முடிவதில்லை; மொழியில், எளிதில் பின்பற்றக்கூடிய நெகிழ்ச்சித் தன்மை ஏற்பட்டு அனைவ ராலும் கையாளப்படுகிறது; எளிய நடையில் பேசுவதும் எழுது வதும் மிகுந்து வருகிறது; அந்த நூல்களைப் படிப்பதே வழக்கமாகி வருகிறது; இந்த அடிப்படையில் சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை ஆகியவை எழுதப்படுகின்றன; அவற்றை விரும்பிப் படிப்போரும் பெருகி வருகின்றனர். இந்த எளிய நடைப் பயிற்சியில் உள்ளவர்களுக்குப் பழந்தமிழ்ப் பதிப்புகள் ஐயத்தையும் மயக்கத்தையும் விளைவித்து விடுகின்றன. காலமின்மையும் விரைவும் அந்த நூல்களில் வெறுப்பை உண்டாக்கிவிடுகின்றன. இவை பழந்தமிழ் இலக்கியங்கள் மக்களிடை பரவாமைக்குக் கூறப் படும் காரணங்கள்.

சுவ.-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/241&oldid=1571325" இலிருந்து மீள்விக்கப்பட்டது