226
சுவடி இயல்
கடினத்தன்மை : அசத்தோத்து, கடறாவு படலம், நேர்பசை, நிரைபசை, பஃறொடை, பரிசிற்றுரை, பாடாண்டிணை, மலை மகணாயகர், நந்தெய்வச் செந்தமிழ், தொல்காப்பிய வேட்டுப் பிரதி, கரும்பயிலக் கூலியா என்பன போன்ற தொடர்கள் கற்போரை மயக்குவனவாகின்றன என்றும் எடுத்துக் காட்டப் படுகின்றன.
8 2
"காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப88 "புரவல னாடூர் பெயர்கொடை பராஅ
யாங்குநீர் செல்கென விடுப்பதாற் றுப்படை
என்னும் அடிகளில் முறையே, கன்னித்துறைச் சேர்ப்ப! என்பது போன்று காதுசேர்ந்த தாழ்குழையாய்! என்பதும் விளியாகப் பொருள் கொள்ளும் தன்மையை அடைகிறது; புரவலன், ஆடு, ஊர் எனவும், யாங்குநீ செல்க எனப் பிழையாகவும் பிரித்துப் பொருள் காண இயலும். எனவே இவற்றை முறையே கா,து,சேர், தாழ், குழை, ஆய் என்று பிரித்தும் புரவலன், நாடு, ஆங்குநீர் செல்க என்று பிரித்தும் பதிப்பித்திருந்தால் பொருள் காண்பதில் ஐயம் ஏற்பட்டிராது.
"...யனைத்தும்வென் றாரியத்தோ டுறழ்தருதமிழ்த் தெய்வத்தை.
-
5
இவ்வடிகளில், ஆரியத்தோடு - உறழ்தருத்தமிழ் என்று பிரித்திருந் தால் 'டு'அடி முதலில் வந்திருக்காது.
வேதத்தே
வாதவனங் கண்டா தடைத்தகத வந்திறந்தாய்"
B
என்பதில் வேதத் தேவு, ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய் என்னும் உரைநடையைக் காண்பதற்குப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.
32. ஆய்வுக்கோவை - பதினான்காவது கருத்தரங்கு தொகுதி -2, பக்.159-160.
33. யாப்பருங்கலக் காரிகை வினை நிரல்நிறைக்கு எடுத்துக் காட்டு. 34. பன்னிருபாட்டியல், 149.
35. ஸ்ரீகாளத்தி புராணம், தமிழ் வாழ்த்து. 36. தமிழ்விடு தூது. 127.