உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

227

பதிப்பில் சுவடிமுறை : பழைய அச்சு நூல்கள் சுவடியில் எழுதப்பட்டுள்ள முறையிலேயே காணப்படுகின்றன. செய்யுள் அடி, சீர் பிரிக்கப் பெறவில்லை. சேர்ந்த சந்தி வடிவங்களும் ஒரே தொடராகக் காணப்படுகின்றன. இடைவெளி காணப்படுவ தில்லை. இவற்றால் கற்போர், செய்யுள்களைப் பலமுறைப் படிப்பதிலும், எதுகை, மோனைகளின் உதவியால் அடிகளைப் பிரித்து அறிவதிலும் பாட்டு வகையைக் காண்பதிலும் காலத்தைச் செலவிட நேருகிறது. பொருள் அறிவதில், நயம் உணர்வதில், சுவைத்து இன்புறுவதில் காலத்தைச் செலவழிக்க க இயலாமல் போகிறது. சுவடியில் காணும்,

"ஒருபெயர் பொதுச்சொலுள் பொருளொழியத் திரிபுவேறு கிளத்தல்...”87

என்னும்

நூற்பாவில்

அமைவன எளிய சொற்கள். ஆயினும்

பிரித்துக் காண்பதில் பொருள் வேறுபாடு அமைகிறது.

'பொதுச்

சொலுள் பொருள் ஒழிய' என்று பிரிக்கலாம். 'பொதுச்சொல் உள்பொருள் ஒழிய' என்றும் பிரிக்கலாம். பிரிப்பு நிலைக்கேற்பப் பொருளும் வேறுபடும்.

"நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேத்த ஏதில் நாட்டுறைபவர்

இதில் தாங்கித்தம் - இசைபரந்து எனப் பதிப்பித்து, 'தம் புகழ் உலகெங்கும் பரககையினாலே' என்று பொருளும் காணப்பட்டது. ஆனால் இவ்வடிகள்,

"......சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த...’89

என்று பிரித்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பொருள் வேறுபடப் பிரித்ததற்கு இவை சான்றாகின்றன. தவறாகவோ, தவறாகவோ, பொருள் வேறு படுமாறோ பிரித்துப் பதிப்பிப்பதைக் காட்டிலும் பிரிக்காமல் பதிப்பிப்பதே சிறப்புடையதாகும் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற்காலப் பதிப்புகள்: அடிகளாகப் பிரித்தும், அடிகளில் சீர்களைப் பிரித்தும் அச்சிட்ட முறை சிறிது சிறிதாக வளர்ந் துள்ளது. ஆயினும் சீரும் தளையும் பொருந்த சொற்கள் வகையுளி

செய்யப்பட்டன.

37. தொல். சொல. 49.

38.

கலித்தொகை.26.

39. தொல். பொருள். 28, மேற்கோள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/243&oldid=1571327" இலிருந்து மீள்விக்கப்பட்டது