உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

D

பொருள்நோக்கா தோசையே நோக்கி”° "நிலமிசை நீடுவாழ் வார்

என்பன தளை கெடாது பிரிக்கப்பட்ட

சுவடி இயல்

அடிகள். பாவினை

அறியவும், ஏற்ற சந்தம் கொடுத்து இசையுடன் படித்து மகிழவும் இம்முறை பயனுடையதாயிற்று. ஆனால் பொருள்காண முயற்சி

தேவைப்படுவதாயிற்று.

பிரிப்பு முறையில் முன்னோடிகள் கருத்து

"நூலைப் படிக்கும்போது புணர்ச்சி பிரிந்திருந்தால் தமிழின்பம் பெறலாம் என்று நாம் மயங்குகின்றோம். இன்பத்திற்கு இது இயற்கையன்று. பிரித்துக் காணும் மொழிப் பயிற்சி பெறுவதே நேர்வழி. ஓரைம்பது பாட்டுக்களைப் பிரித்தும் புணர்த்தும் பார்க்கும் சிறுநன்முயற்சி நமக்கு வேண்டும். இச்சிறு முயற்சிக்குச் சோம்பற்பட்டு, ஒருகோடிப் பாடல்களை முற்றும் பிரிவினை செய்து பதிப்பிக்கும் போக்குக்கு இடங்கொடுத்தலாகாது"

என்பார் வ.சுப. மாணிக்கம். 2

இம்

“ஒருகாலத்தில் அடிவரையறை தெரியக்கூடாத வண்ணமே செய்யுட்களை ஏட்டில் எழுதிவந்தனர். அச்சில் அடிவரை யறையைக் காமா, உடுக்குறி முதலிய குறியீடுகளால் காட்டி வந்தனர்... பின்னர் சீர்பிரித்து அச்சிடத் தொடங்கினர்... முறையில் பெரும்பயன் உண்டாயிற்று. செய்யுட்களின் இயல்பு நன்கு புலனாயிற்று. பிரிப்பதில் செய்யுள் இலக் கணத்தை முக்கியமாகக் கவனித்து வந்தமையினாலே அச் செய்யுட்களில் பிழையிருக்குமாயின் அவை எளிதில் புலப்படு தற்கும் இடம் ஏற்பட்டது... மேலும் சீர்களைப் பிரித்தல் இசை யின்பத்தை உணர்தற்கும் பயன்பட்டது.

“பொருளுணர்ச்சிக்குச் சீர்பிரிப்பதைக் காட்டிலும் சந்தி பிரிப்பது அவசியம். ...அடிபிரித்தல், சீர்பிரித்தல், சீருள்ளே சந்திபிரித்தல், பதங்களைப் பிரித்தல் எனவரும் பரிணாமக் கிரமப்படியும் இது உண்மையாதல் காணலாம். எனினும் இசையும் ஒரோ இடங்களில் கவனிக்கும்படி யாயிற்று"

40. யாப்பருங்கலக் காரிகை, வகையுளி -எடுத்துக்காட்டு. 41. குறள், 4.

42. இரட்டைக் காப்பியங்கள், பதிப்புரை, பக். 72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/244&oldid=1571328" இலிருந்து மீள்விக்கப்பட்டது