உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

என்பர் எஸ். வையாபுரிப்பிள்ளை.

229

சந்தியும் மொழியும்: சீரில் அமையும் கடின சந்தியைப் பிரித்துப் பதிப்பிப்பது நூலை எளிமைப்படுத்தித் தரும் முறை யாகும். ஆனால், சந்திமுறை என்பது தமிழ்மொழியின் ஒரு தனிச் சிறப்பு ஆகும். இது ஓசை அடிப்படையில் அமைந்தது ஆயினும் பொருளை அடிப்படையாகக் கொண்டே விளங்குகிறது. எனவே சிலவிடத்துப் பொருளுக்காகவும் சந்தி மாற்றம் ஏற்படுகிறது. இச் சந்திகளைப் பிரித்து அறியும் விதி முறைகளை அறிந்த பிறகே இலக்கியத்தை நுகர வேண்டும் என்பது மொழியைத் தனி உரிமைப் பொருளாகக் கருதுவதாகிவிடக் கூடும் என்ற கருத்தும் வெளியாகி யுள்ளது.

4

குறையாவண்ணம்,

சீர்.

தளை

முடிவு : பொருள் உணர, சந்தி பெருந்தடையாகிறது. பிரித்து அமைப்பதால் ஓசை இன்பம் கெடுகிறது; சீர்தளை சிதை கிறது; ஆனால் பொருளைப் புரிந்துகொள்ள எளிமையாகிறது. இந்த இருவேறு கருத்துகளையும் பதிப்பாசிரியர் உளங்கொள வேண்டும். பாட்டின் ஓசை சிதையா வண்ணம், மொழி இயல்பு மாறாவண்ணம் அமைத்துப் பதிப்பிப்பதே பாடல், உரைநடை ஆகியவற்றின் வேறுபாடுகளை உணர்ந்து பதிப்பிப்பதாகும். சந்திகளைப் பிரித்துக்காட்டுதல் என்ற வகைகளில் கொண்டு, பாடலின் கீழோ அடிக் குறிப்பிலோ அமைத்துப் பதிப்பிப்பதே சிறந்ததாகும்.

பாட்டும் உரைநடையும் : பாட்டில் சீர்தளை சிதையாது ஓசை யின்பத்தை உணருமாறு பதிப்பித்தல் வேண்டும் என்பது போலவே உரைநடையிலும் சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் பதிப்பிப்பது பொருள் விளக்கத்திற்கு அவசியமாகிறது. சான்றாக,

தமிழ் என்பது ஒரு தனிச்சொல்; மொழி என்பதும் ஒரு தனிச் சொல். தமிழ்மொழி என்று வரும்போது தனித்தனியே இடை வெளிவிட்டுப் பதிப்பித்தல் கூடாது. இரண்டும் இணைந்து ஒரு பொருளை உணர்த்துகின்றன. ணைந்த அவை ஒரு சொல்

தன்மையைப் பெறுகின்றன.

பேச்சுமொழி, எழுத்துமொழி, வடமொழி, வடசொல், உரை நடை, செய்யுள்நடை, மொழிநடை, தமிழ்நாடு, ஆந்திரநாடு, ஆய்வடங்கல், அடிக்குறிப்பு போன்றவை இத்தகையன.

43. திவ்யப்பிரபந்தம், முதலாயிரம், பதிப்புரை, பக். 44. ஆய்வுக்கோவை, 14-2; பக். 164.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/245&oldid=1571329" இலிருந்து மீள்விக்கப்பட்டது