உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

ஆ பிரித்து அமைப்பதில் சில வரன்முறைகள்

சுவடி இயல்

பெயர்ச் சொற்கள்: அடையோடு கூடியும், இருசொல் இணைந்தும் வரும் பெயர்களைப் பிரித்தல் கூடாது. சான்றாக மேலே கூறிய சொற்களோடு மேலும் சில பெயர்களைச் சுட்டலாம். அவை :

அரசமரம்,

ஆடித்திங்கள், இலவம்பஞ்சு,

எம்பெருமான்,

காமராசர், காலைநேரம், கும்பகோணம் கூன்பாண்டியன், சுந்தர மூர்த்தி, தலை ஓடு, நாவுக்கரசர் இவற்றைப் போன்ற சொற்கள் ஓரு சொல் நீர்மையவாய் அமைதல் வேண்டும்.

உருபுகள் : வேற்றுமை உருபுகள் தனித்து நின்று பொருள் தாரா இடைச்சொற்கள் ஆதலின் அவை சேர்ந்து வரும் பெயர்ச் சொற்களிலிருந்து அவற்றைப் பிரித்து அமைத்தல் கூடாது.

அன்பால் திருத்தினன்; சாந்தொடு வந்தனள்; அடியாரது பெருமை; மடவார்கண் காண்பன்

என உருபுகளைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

உருபுப் பொருள் சொற்கள் : உருபின் பொருளில் வரும் பிற சொற்கள் தனித்து நின்று பொருள் தருவனவாயினும் அவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது. பிரித்தால் தனிப் பொருளைத் தருவ தாகிவிடும். பிரித்து எழுதலாம் என்று கூறி_'வான் புலன்கள் அகத்து அடக்கி; 'கொடிமேல் காடிமேல் உயர்த்தினான்' என்பனவற்றைக் காட்டுவர்.45

புலன்களை அகத்து அடக்கி எனவும், புலன்களின் அகத்து அடக்கி எனவும் பொருள் கொள்ள வாய்ப்பளிக்கும். புலன் களகத்து எனச் சேர்த்துப் பதிப்பிப்பதே கருதிய பொருளைத் தருவ தாகும். கொடிமேல் என்பதும் இவ்வாறே அமையும்.

இயல்பு புணர்ச்சிகள்: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது, உடம்படுமெய் பெறுவது, குற்றியலுகர ஈற்றின் முன் உயிர் வந்து இயைவது ஆகியவை இயல்பாக ஏற்படும் சந்திகள். இவை சொற் றொடர்களில் விட்டிசை இன்றி இனிமை பயப்பவை. விரைந்து

பேசவும் எழுதவும் பயன்படுபவை. ஐயமும் கடினத் தன்மையும் ஏற்படும் சில இடங்களைத் தவிர பிறவற்றைச் சேர்த்து அமைத்தலே மொழிக்கு இனிமை பயப்பதாகும்.

45. தேவாரம், முன்னுரை, பக். 173.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/246&oldid=1571330" இலிருந்து மீள்விக்கப்பட்டது