உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

231

காரிருள், ஈரிரண்டு, நாலாறு, இடமில்லை, மரமாகி, மனிதராய், தேவராய் என்பன கார்இருள், ஈர்இரண்டு, நால்ஆறு.. என வழக்காற்றிலும் பிரித்து வழங்கப்படுவதில்லை. எளிமையாக விளங்குவன பிரித்தமைப்பது தேவை இல்லாதது. இவற்றைப்

போல,

போகவில்லை, வரவில்லை, அறிவில்லை,திருவாரூர், புழுவாய், அலியாய், கையிலங்குபொன்,மெய்யிலங்குநீறு என்பனவாகிய உடம்படுமெய்ப் புணர்ச்சித் தொடர்கள் எளிய வழக்காற்றில் உள்ளவை; சந்தி பிரித்தலோ. பிரித்து அமைத்தலோ தேவையில்லாதவை. இவற்றுள் புழுஆய், அலிஆய் எனப் பிரிப்பது புழுஆகி, அலிஆகி என்னும் ஆக்கப் பொருளைத் தருவதாகும். புழுவாய், அலியாய் என்பன புழுவாக, அலியாக என்னும் இயற்கைத் தன்மையைச் சுட்டுவனவாகப் பொருள்படும். பொருளுக்கேற்பப் பிரித்தல் வேண்டும் என்பர். 46 கையிலங்கு, மெய்யிலங்கு என்பன-கை இலங்கு, மெய் இலங்கு எனப் பிரிக்கப் படுவதும் அவ்வாறே பொருள் தெளிவுக்காக என்பர். ஆயினும் சொற்கள் விட்டிசை உடையனவாகித் தொடரமைப்பைக் கெடுக் கின்றன.

வேறிலாப்பதப்பரிசு. ஈறிலாதநீ, தோடுடைய செவி என்னும் குற்றியலுகரப் புணர்ச்சிகளுள் வேறுஇலா, ஈறுஇலா . தோடுஉடைய என்பனவும் விட்டிசையுடையனவாகின்றன. சேர்த்து அமைப்பதே வழக்காறுடையதும் இனிமை வாய்ந்ததுமாகும்.

'இல்' என்பது : இல் என்பது வீடு, உருபு, இன்மை என்பன வாக வரும். உருபாக வரின் முன்பு உருபுவிதி கூறியதுபோல வீட்டில், அறையில், கண்ணில் எனச் எனச் சொல்லோடு இணைந்து நிற்கும். இன்மைப் பொருளில் வரின் சந்தி தோன்றாது. வழுவில் கொடை, ஏதமில் கொள்கை, கோளில் பொறியிற் குணமிலவே என்பன போன்று இயல்பாகவே நிற்கும். இங்கும் பெயர்களோடு சேர்த்தே அமைக்க வேண்டும்.

சுட்டு. வினா இடைச்சொல் : சுட்டுச்சொல், வினாச்சொற் களின் முன் உயிர்வர வகரம் தோன்றி இரட்டிக்கும். அல்லது வருமொழி முதலெழுத்து மிகும். இவ்விடங்களில் வருமொழியைப் பிரித்து அமைக்கலாம். அதாவது,

46. ஷை. தேவாரம், முன்னுரை, பக். 173.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/247&oldid=1571331" இலிருந்து மீள்விக்கப்பட்டது