உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

சுவடி இயல்

அவ் வேளை; இவ் உலகம்;

அத் தேவர்; இம் மனிதர் எனவும்,

எவ் உலகம்; எம் மனிதர் எனவும் அமைக்கலாம்.

எகர இடைச்சொல் : வினாப் பொருளில் வராமல் எல்லாம் என்னும் பொருளில் வரும் எகர இடைச் சொல்லைப் பிரித்து அமைக்கக் கூடாது.

எவ்வுலகும், எக்காலமும், எவ்வகையாலும், எப்பொழுதும், எந்நாளும்

என்பனபோல் அமைக்க வேண்டும்.

தனிக்குறில்முன் ஒற்று: தனிக்குறில்முன் ஒற்றுடைய மொழி முன் உயிர் வரின் நின்ற ஓற்று இரட்டும். அவற்றைச் சேர்த்து அமைத்தல் வேண்டும்.

இன்னிசை, கல்லூரி, தன்னுடைமை, மன்னுயிர், வெள்ளருவி போல்வன இவ்வகையைச் சார்ந்தவை.

மண்ணுலகு, விண்ணுலகு என்பன போன்று இவ்விலக்கணத் தில் வரும் இருபெயர் ஒட்டுகளும் சேர்த்து எழுதப்பட வேண்டி யவையாகும்.

தொகைநிலைத் தொடர்:

வேற்றுமைத்தொகை

முதலான

தொகைநிலைத் தொடர்களைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

தலைவணங்கு, புலவர் மகன், வள்ளல்கை, மழைக்கை, துடியிடை, இராப்பகல், புலிவில்கயல், பூங்குழல்,

அலைகடல், செங்குமுதம்

ஆகிய தொகைச் சொற்கள் இருசொல்லுடையவை யாயினும் சொல் தன்மையவாய் எழுதப்படுதல் வேண்டும்.

ஒரு

உவமை உருபுகள் : பெயருடனும் வினையுடனும் இணைந்து வரும் உவமை உருபுகள் இணைத்து எழுதப்படுதல் வேண்டும்.

பால்போலும் இனியசொல்; நிலவன்ன தன்மை; நாயனையார்; பொன்திரண்டன்ன புரிசடை

என்பன போல உவமை உருபுகளைச் சேர்த்து எழுத வேண்டும்.

நாள்தொறும்,

வீடு

தொறும் என்னும் இடைச்சொல்! தோறும், பக்கந்தோறும் - எனச் சேர்த்து எழுதுதல் தொறும், தோறும் என்னும் இடைச்சொற்களுக்கு உரிய முறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/248&oldid=1571332" இலிருந்து மீள்விக்கப்பட்டது