உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

233

இரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடரும் : சொற்றொடர் களில் வரும் இரட்டைக் கிளவிகளையும் இணைத்து எழுத வேண்டும். உடன்வரும் 'என' என்னும் உருபையும் சேர்த்து எழுதவேண்டும்.

கலகல ; கலகலவென; பலபல ; இடைஇடையே - என ஒரு சொல் நீர்மைத்தாய் அமைக்க வேண்டும்.

பெயரோடு வரும் சொல்லுருபு : திருவாரூர் என்பது, இட மாவது,கற்றோர் என்போர், அருகர் ஆனவர் என்பனபோன்று பெயர்களை விளக்க இடையிலே வரும் சொல்லுருபுகளைப் பிரித்து அமைக்கக் கூடாது.

எச்சத் தொடர்கள் : பெயரெச்சச் சொற்களின்முன் சுட்டுச் சொல் வரின் வரின் சேர்த்தும், பெயர்ச் சொற்கள் வரின் பிரித்தும் எழுதுதல் வேண்டும். வினையெச்சத் தொடர்களைப் அமைக்க வேண்டும்.

பிரித்து

எனப்

கற்றஅவர், வாழும்அவை, வணங்குமவன் என்பன சுட்டுச் சொல்லோடு இவை வந்த எச்சங்கள். வாழும் அவை பிரிக்கப்பட்டாலும், வணங்குமவன் எனச் சேர்ந்திருந்தாலும் எழுதும்போது, வாழும்அவை எனச் சேர்ந்து அமைதல் வேண்டும். கற்ற சான்றோர், வாழும் உயிர்கள். 6 வணங்கும் சிறுவன் என்பன பெயர்கொண்டு முடிந்தவை. பிரித்துக் காட்டப்பட்டன.

பகுதிப்பொருள் விகுதி : பகுதிப் பொருள் தரும் விகுதிகளைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

திருவாரூர் அதனுள், கோட்டை யாகியவற்றை என்பன முறையே திருவாரூருள், கோட்டைகளை எனப் பகுதிப் பொருளைச் சுட்டிய விகுதிகளுடன் வந்தன. அவை சேர்த்து எழுதப்பெறுதல்

வேண்டும்.

காரணப்பெயர், வினைமுதற் பெயர்கள்

வரைமார்பன், நெற்பொரி, புரமெரித்தோன், மழுவேந்தி என்னும் காரணப்பெயர், வினைமுதற் பெயர்கள் இரண்டிரண்டு சொற்களால் வந்தவை ஆயினும் பிரித்து எழுதுதல் கூடாது.

துணைவினை : 'செய்' என்னும் அடியாகிய சொற்களும், அவ்வாய்பாட்டுச் சொற்களும் துணைவினையாகுமிடத்துச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/249&oldid=1571333" இலிருந்து மீள்விக்கப்பட்டது