உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

சுவடி இயல்

ஒலிசெய், பொடிசெய்த, அருள்செய்தவன், வைது நின்ற, நடை பயின்ற என்பன துணைவினை சேர்ந்து வந்தவை; சேர்த்து எழுதப் பட்டன.

உரைநடைத் தொடர்களில் தனித்து நின்று பொருள் தராத ருபு முதலானவற்றையும், இரண்டு மூன்று சொற்களாயினும் ஒரு பொருள் தருவனவற்றையும் சேர்த்து ஒருசொல் தன்மையவாய்க் காட்டுதல் மரபு. தனித்தனி பொருள் தருவன, விளக்கம் பெற்று நிற்பனவற்றைப் பிரித்து அமைத்தல் வேண்டும். இவை பதிப்பில் தெளிவை ஏற்படுத்துவனவாகும்.

நிறுத்தற் குறிகள்

சொற்களையும் சொற்றொடர்களையும், சொல்லமைதி, பொருளமைதிகள் விளங்குமாறு படித் து உணரக் குறித்துக்

காட்டும் குறியீடுகள் நிறுத்தற் குறிகள் எனப்படுகின்றன.

உரையாடும்பொழுதும் பேசும்பொழுதும் செய்திக்கு ஏற்ப எடுத்தும் படுத்தும் பேசுகிறோம்; சாற்களின் இடையிடையே நிறுத்திப் பேசுகிறோம்; தொடர்ச்சியாகப் பேசி முடிக்கிறோம்; வினா, வியப்பு, அச்சம், வருத்தம் ஆகிய உணர்ச்சிகளைத் தனித்தனி ஒலிக் குறிப்புகளால் உணர்த்துகிறோம். வை கேட் போருக்குப் பொருள் தெளிவை உண்டாக்குகின்றன. இவ் ஒலிக் குறிப்புகளைப்போல், எழுத்து நடையில் பொருள் தெளிவைக் பயன்படுவன நிறுத்தற்குறிகள். இக்குறிகளும் இவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் இங்கு தரப்படுகின்றன.

காட்டப்

சுவடிகளில் நிறுத்தற்குறிகள்': சுவடிகளில் நிறுத்தற்குறிகள் கையாளப்படவில்லை. சுவடிகளின் அக அமைப்பில் கூறப்பட்ட, பாடல் முடிவில் காணும் குறிகளே சுவடிகளில் கையாளப்பட் டுள்ளன. அவையும் ஒரே மாதிரியாக எல்லாச் சுவடிகளிலும் காணப்பெறாதனவாகும். பழைய பதிப்புகளிலும் இக்குறிகளைக் கையாளும் முறை தெளிவாக அமையவில்லை.

இந்நூலுரையிலே காட்டப்பட்ட குறிகள்

ம் முளை கூட்டுச்சொல் முதலியவற்றின் பின்னும், ச்சிறு கீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும், இப்பெருங்கீற்றுப் பதசாரத்துக்குப் பின்னும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/250&oldid=1571334" இலிருந்து மீள்விக்கப்பட்டது