உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

235

( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்து முற்றுச் சொல்லுக்குப் பின்னும்,

[ ] இவ்விருதலைப் பகரந் தாத்பரியத்துக்கும்,

இத்தாரகை அடியிற் காட்டப்பட்டவற்றிற்கும் வைக்கப் பட்டன

என்னும் நிறுத்தற்குறிகளைப் பற்றிய குறிப்பு 'நிஷ்டாநுபூதிமூலம்' (1887) என்னும் நூலில் முதன் முதலாகக் குறிக்கப்பட்டுள்ளது.

பலவகை வளர்ச்சி நிலைகள் துணைபுரியும் இக்காலத்துத் திருத்தப் பதிப்புகளில் நிறுத்தற் குறிகளைத் தெளிவாகப் பயன் படுத்த வேண்டும் என்பதற்காக இப்பகுதி அமைகிறது. செய்யுள் நடையில் நிறுத்தற்குறிகளைக் கையாள்வது ஓசையைக் கெடுப்ப தாக அமையும; உரைநடைக்கே இக்குறிகள் பயன்படுவனவாகும். பிரித்துப் பதிப்பிக்கும் முறையில் முன்பு குறிப்பிட்ட எஸ். ராஜம் வெளியீடுகள், பிரஞ்சு நிறுவனத் தேவாரப் பதிப்பு ஆகியவை செய்யுள் நடையிலும் நிறுத்தற்குறிகளைக் கையாண்டுள்ளன.

காற்புள்ளி (, ) காற்புள்ளி வரவேண்டிய இடங்கள்: பெயர்கள் பல அடுக்கி வரும் இடம்: நிலம், நீர், விண், தீ, காற்று என்பன ஐம்பூதங்கள். இத்தொடரில் பிரித்துக் காட் காற் புள்ளிகள் இடப்பட்டன. ஆனால் இறுதிப் பெயரையடுத்து வாக் கியத்தின் பிறசொற்கள் தொடரும் இடத்தில் இப்புள்ளி

கூடாது.

வரக்

வினை எச்சங்கள் அடுக்கி வரும் இடம் : டம்: ஈறாகி, ஈறாகி, முதலுமாகி, குணம்பலவாய், மறைநான்காகி நின்றானைப் போற்றுதும் என்னும் இத்தொடரிலும் ஈற்றில் நின்ற எச்சச் சொல் புள்ளியிடப்பெற

வில்லை.

பெயரெச்சங்கள் அடுக்கி வரும் இடம்: நலம்

எலாம்

ளைந்த. நள்ளாறமர்ந்த, உமையொருபாகனாம் பெருமான்.இவ் வாக்கியத்திலும் ஈற்று எச்சத்தொடர் தவிர பிற எச்சத்தொடர்கள் காற்புள்ளி பெற்றன.

முற்றெச்சங்கள் அடுக்கி வருமிடம்: பொடிகொள் உருவர், புலியின் அநளர், கலந்த நீற்றர், கறைசேர் கண்டத்தர் கயிலை மலையாரே. ஈற்றுத் தொடர் தவிர பிற முற்றெச்சத் தொடர்கள் காற்புள்ளி பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/251&oldid=1571335" இலிருந்து மீள்விக்கப்பட்டது