உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

1. சுவடி இயல்

சுவடி என்னும் சொல் கையால் எழுதிய நூலைக் குறிப்பது; காரணப் பெயராய் அமைந்தது. தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பனவும் எழுதிய பொருள்களைக் குறித்தன. தந்திரம், தூக்கு, நூல்,பனுவல், புத்தகம் என்னும் சொற்களும் சுவடியைப் போன்று அமைந்தன. சுவடியைப் பற்றி அறிவது சுவடி இயல் ஆகும். சுவடி இயல் என்னும் தொடரின் சொற்பொருள், சுவடி இயலின் நோக்கம், சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் மூன்று தலைப்புகளில் இப் பகுதியின் ஆய்வு அமைகிறது.

சுவடி இயல்

அ. சொற்பொருள் : சுவடிகளைப் பற்றி அறிவது சுவடி இயல் எனப்படுகிறது. சுவடிகளைப் பற்றி ஆய்வது, உணர்த்துவது, படிப்பது என்பனவாகிய பொருள்களிலும் இதனைக் கருதலாம்.

உள்ளத்தைப் பற்றி அறிவது, ஆய்வது, உணர்த்துவது, கற்பது உளவியல் எனப்படுகிறது. அறிவியல், ஆய்வியல், ஆன்மவியல், உயிரியல், ஒலியியல், கல்வியியல், சமூகவியல், தமிழியல், தாவர வியல், புவியியல், பொருளியல், மானுடவியல், மொழியியல், விலங்கியல் முதலான தொடர்களும் இத்தகு பொருளில் வழங்கு வனவாகும்.

6

சுவடி : தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்கள் எழுதப்பெற்ற ஏட்டிற்கும் நூலுக்கும் ஆகுபெயர்களாய் வழங்கி வருவதுபோலச் சுவடி என்னும் பெயரும் காரணப்பெயராய் அமைந்தது. ஆனால் சுவடி என்ற சொல் பற்றிய செய்தியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/23&oldid=1571092" இலிருந்து மீள்விக்கப்பட்டது