உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

சுவடி இயல்

எழுது பொருள் பற்றிய குறிப்போ தொல்காப்பியத்தில் சுட்டப் பெறாதது குறிப்பிடத்தக்கதாகிறது. இருப்பினும் சுவடி என்ற பெயர் நூலுக்கு ஆகிவந்த காரணத்தைச் சில இலக்கியச் சான்று களுடன் நிறுவமுடிகிறது.

சுவடு+இ=சுவடி. சுவடு உடையது சுவடி எனக் காரணப் பெயர் பெறுகிறது. எழுதப்படுதலின் எழுதப்படுதலின் எழுத்து என்றாற்போல எழுத்துச் சுவடு உடையது ஆதலின் சுவடி எனப்பெறுகிறது. பதிதலால் உண்டாகும் குறி சுவடு ஆகும். எனவே எழுத்துகள் பதியுமாறு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடி எனப் பெறுகிறது.

91

“பூவா ரடிச்சுவடுஎன் தலைமேல் பொறித்தலுமே வெஞ்சினத்து அரியின் திண்காற் சுவட்டொடு விஞ்சை

வேந்தர்

பஞ்சியங் கமலம் பூத்த பசுஞ்சுவடு உடைத்து மன்னோ இவ்வடிகளில் அமைந்துள்ள சுவடு என்னும் சொல் பதிதலால் உண்டாகும் குறியினைச் சுட்டுகிறது.

சுவடு பாதம் நிலத்திற் பொருந்திய தடம். சுவடு உடையது சுவடி ஆகிறது. சுவடி என்பது இணை,கற்றை, கட்டு, பொத்தகம் என்னும் பெயர்களையும் பெறுகிறது. சுவடித்தல்-பொருத்தி அழகு படுத்துதல். சுவடி - சோடி, சோடணை - அழகுபடுத்துதல் என்னும் பொருள்களைத் தேவநேயப் பாவாணர் விளக்குவதாக

எடுத்துக்காட்டுவர்.

“பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி பற்றிய கையினர்’”4

என்னும் அடிகளில் ஏடுகளின் தொகுப்பாகிய கட்டு, சுவடி என்று குறிப்பிடப்பெறுகிறது. கையால் எழுதப்பெற்ற படிவம் சுவடு எனப்படும். எந்தப் பொருளிலும் எழுதப்பட்டதாக இருக்கலாம். எளிதாகவும் விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் எழுதப்பெற்றதே சுவடியாகும். கல்லில் வெட்டுவது போன்ற கருவிகளைக் கொண்டு செதுக்கப்பெறும் கல்வெட்டுப் படிவங்களி லிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடியதே சுவடியாகும். மிகப் பழங்

1.

3.

திருவாசகம்,241.

2.

பாலகாண்டம் . 934. தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுகள், பக். 107.

4. பெருங்கதை, 3:1:119-120.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/24&oldid=1571093" இலிருந்து மீள்விக்கப்பட்டது