உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

9

காலத்தில் அல்லது இடைக்காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்கே சுவடி என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது என்று கூறுகிறது ஆங்கிலப்பேரகராதி.

"தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா

புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்"6

என்னும் தொல்காப்பிய நூற்பா தோடு,மடல், ஓலை, ஏடு, இதழ் என்பன புறத்துக்காழுடைய பனை, தெங்கு, கமுகு முதலியவற்றின் இலையாகிய உறுப்பினைக் குறிக்கும் மரபுச் சொற்களாகும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

எழுதப்பெற்ற ஏடுகளும் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் சுட்டப்பெறுவதை இலக்கியங்களிலும் வழக் காற்றிலும் காணமுடிகிறது. இவற்றுள் பெரும்பாலும் கடித வடிவில் எழுதப் பெற்றவை மடல், ஓலை ஓலை என்ற பெயர்களைப் பெறுகின்றன. நூல் வடிவில் அமைந்தவை ஏடு என்ற பெயரைப் பெறுகின்றன. இவை வை ஆகுபெயர்கள். இவ்வாகு பெயர்களைப் போலவே சுவடி என்னும் காரணப்பெயரும் அமைகிறது.

தோடு

அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுக மறுத்ததற் கிரங்கி””

அழகிய தோட்டில் எழுதிய திருமுகம் என்னும் பொருளில் தாழை மடலாகிய எழுதப்படுபொருள் தோடு என்ற மரபுச் சொல்லால் வழங்கியுள்ளதையும் இவ்வடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

மடல் - (முடங்கல்)

5.

6.

1.

9.

"மலர்ந்தசெந் தாழை மென்மடலின் மேல் தனக்கு இலங்கிழை யுகிரினால் எழுது பாசுரம்’8

உலைவறு முடங்கல் தீட்டி ஒன்றிரண் டனுப்ப

Encyclopaedia Britannica Vol xviii. p. 618. தொல்காப்பியம், மரபியல் - 86 சிலப்பதிகாரம், 8 : 111-112. குசேலோபாக்கியானம்,283

லாமே

8. நைடதம் -70.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/25&oldid=1571094" இலிருந்து மீள்விக்கப்பட்டது