உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சுவடி இயல்

இவ்வடிகளில் மடல், முடங்கல் என்பன எழுதப்படுபொருளின்

பெயராகவும் கடிதத்தைக் குறிக்கும் பெயராகவும் முறையே அமைந் துள்ளன.

"கண்மணி அனையாற்குக் காட்டுக வென்றே மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் '

10

"எற்பயந் தோர்க்கிம் மண்ணுடை முடங்கல்’11

தாழை

என்னும் சிலப்பதிகார அடிகள் மாதவியால் எழுதப்பெற்ற கடிதம் முடங்கல் என்ற பெயர் பெறுவதை உணர்த்துகின்றன. மடலில் எழுதப்பெற்ற கடிதம் சுருளாக முடக்கப்பட்டு அனுப்பப் பெறுவது ஆதலின் முடங்கல் ஆகிறது.

ஓலை : லையாகிய உறுப்பைக் குறிக்கும் ஓலை என்னும் சொல் எழுதப்பெற்ற ஓலைகளையும் குறித்து வழங்குகிறது.

"ஒட்டித்தான் விடுத்த ஓலை உட்பொருள் உரைமின்

என்ன

"ஓலையுட் பொருளைக் கேட்டே ஒள்ளெயி றிலங்க

கணக்குத்துறை முற்றிய கடுஞ்சொல் ஓலை அரக்குப்பொறி யொற்றி யானையிற் போக்கி ”14

நக்கு

91 2

18

இவ்வடிகளுள் காணும் ஓலை என்னும் சொல் ஆகுபெயராக மன்னர்களால் அனுப்பப்பெற்ற அரசவைச் செய்திகளும் ஆணை களும் அடங்கிய கடிதங்களைச் சுட்டிநின்றது.

"கொற்றவர் திருவுக் கேற்பக் குறித்து நாள் ஓலை விட்டார்”15

6

"பெருகுமண நாளோலை பெருஞ்சிறப்பி னுடன் போக்கி'’15

"தோகைமண வோலைகொடு தூதுவ ரடைந்தார்”19

இவற்றுள் உள்ள ஓலை என்னும் சொல் திருமணச் செய்தியடங்கிய கடிதங்களைக் குறித்து நின்றது.

10. சிலப்பதிகாரம் 13:76-77. 12. சீவகசிந்தாமணி, 2140.

11. சிலப்பதிகாரம் 13:96. 13. சீவகசிந்தாமணி, 2148.

14. Qu(BIÊN 605, 1:37:208 - 209. 15. தடுத்தாட்கொண்டபுராணம், 9. 16. திருஞானசம்பந்தர் புராணம், 1169, 17. நைடதம், நளன் தூது, 3.

}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/26&oldid=1571096" இலிருந்து மீள்விக்கப்பட்டது