உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

"மாதவி யோலை மலர்க்கையி னீட்

"...வேண்டிற் றெல்லாங் குறைவின்றித் தரநாம் ஓலை தருகின்றோம்...

"தேவர்கோன் எழுதும் ஓலை"20

11

இவ்வடிகளுள் வந்துள்ள ஓலை என்னும் சொல் பலதிறப்பட்ட சொந்தச் செய்திகள் எழுதப்பெற்ற கடிதங்களைச் சுட்டி நின்றது.

"ஓடுநீ ருடன்செ லாது நிற்குமோ ஓலை...921

2 2

ஆற்றிடை சமண ரோலை அழிவினால் ஆர்ந்த தம்பம்' கடிதம் என்ற நிலைமாறி சிறந்த அறவுரை முதலான கருத்து களடங்கிய இலக்கியமாகத் தொகுக்கும் தன்மை வாய்ந்த ஏடுகளும் இவ்வடிகளில் ஓலை என்றே குறிக்கப்பெறுகின்றன.

"மூட்சியிற் கிழித்த ஓலை படிஓலை மூல ஓலை மாட்சியிற் காட்ட வைத்தேன்

9928

"வருமுறை மரபு ளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கிவை

யென்எழுத்து

924

முறிச்சீட்டு, உரிமைச் சீட்டு ஆகிய ஆவணக் கடிதங்களும் ஓலை என்ற பெயரால் ஆளப்பெற்றுள்ளன என்பதற்கு இவ்வடிகள் சான்றாகின்றன.

ஏடு : எழுதப்பெற்ற ஓலைகள் ஏடு என்ற பெயரையும் பெறுகின்றன

"வடமொழி வாசகஞ் செய்தநல் லேடு 5 பொருவருங் கவிதை யேட்டைப் போற்றிமுன்'

செய்தியும்

926

கவிதையும் எழுதப்பெற்ற ஓலைகள் ஏடு

என்ற

பெயரால் வழங்கப்பட்டன என்பதை இவ்வடிகளால் அறியலாம்.

18. சிலப்பதிகாரம், 13 :82.

19. கழறிற்றறிவார் புராணம், 27.

20. ஷை. இந்திரன் முடிமேல் எறிந்தது, 52.

21. திருஞானசம்பந்தர் புராணம், 807. 22. க்ஷ.856. 23. தடுத்தாட் கொண்டபுராணம், 56.24.ஷெ.59. 25. சிலப்பதிகாரம், 15:58.

26. திருவிளையாடல் - கிழியறுத்த - 11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/27&oldid=1571097" இலிருந்து மீள்விக்கப்பட்டது