உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

சுவடி இயல்

"நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறுந் தன்மை ஏடுற வெழுதி”

'வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு

[யெல்லாம்

இவற்றுள் வழங்கும் ஏடு என்னும் சொல் எழுதவிருக்கும் ஓலைகள், எழுதிய ஓலைகள் ஆகியவற்றைச் சுட்டி நிற்கின்றது.

"ஏடு தேடி யலைந்தஊர் எத்தனை’”29

"செய்ய சிவஞானத் திரளேட்டில் ஓர்ஏடு'

எழுதப்பெற்ற ஓலைகளின் தொகுப்பாகிய சுவடி வடிவில் உள்ள நூலையும் ஏடு என்றே குறிக்கும் இலக்கிய அடிகளுக்கு இவை சான்றாகின்றன,

இதழ்: நாளேடு, வாரஏடு, திங்களேடு என்று வழங்குவது போலவே, நாளிதழ், வாரஇதழ், திங்களிதழ் என்னும் வழக்காற்றில் இதழ் என்னும் மரபுச்சொல் ஆகுபெயரால் வழங்குவதை இக் காலத்தில் காணுகிறோம்.

திருமுகம் :

இலையாகிய

உறுப்பினைக் குறிக்கும் மரபுச்

சொற்களில் ஒன்றாகத் தொல்காப்பியம் குறிப்பிடாத திருமுகம் என்ற சொல்லும் ஓலையில் எழுதிய கடிதத்தைக் குறிப்பதாக இலக்கியச் சான்றுகள் உள்ளன.

"அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை யெழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற் கிரங்கி”81

என்பது சிலப்பதிகாரச் சான்று.

இச்சான்றுகளுள் ஏடு சுவடி என்பன நூலைக் குறிக்கும் சொற் களாகப் பயன்படுகின்றன. இடை நரம்பு நீக்கப்பட்ட ஓலையின் ஒற்றை அலகு ஏடு எனப்படுகிறது. அவ்வேட்டில் எழுதப் பெற்றதால் நூலும் ஏடு என்றே பெயர் பெறுகிறது. சுவட்டினைத் தாங்கும் அவ்வேடுகளின் தொகுதி சுவடி எனப்பெறுகிறது. இவற்றைப் போலவே தந்திரம், தூக்கு, பனுவல், புத்தகம் என்னும் பெயர்களும் நூலைக் குறித்து நிற்கின்றன.

2:

27. திருஞானசம்பந்தர் புராணம், 796. 28. மனோன்மணீயம் -4.29. தனிப்பாடல், 2 : 815. 30. தமிழ்விடு தூது, 3. 31. சிலப்பதிகாரம் - 8: 111 - 112.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/28&oldid=1571098" இலிருந்து மீள்விக்கப்பட்டது