உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

13

தந்திரம் ; "தரும்வகை செலுத்துதல் தந்திர வுத்தி' 82 என்னும் அடியில் உள்ள தந்திரம் என்றசொல் நூலைச் சுட்டுகிறது. தன்திறம் பெறுதற்குரிய வழிமுறைகளை வகுத்துக் காட்டுவது என்னும் பொருளில் தந்திரம் என்ற பெயர் பெறுகிறது.

தூக்கு: “தூக்கு என்பது பாக்களைத் துணித்து நிறுத்துதல்' என்பர் பேராசிரியர். 'தூக்கு எனினும் ஓசையெனினும் ஒக்கும்' என்பர் இளம்பூரணர். தூக்கென்பது

சொல்லின்

முடியும் இலக்கணமாம். அது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும் என்றின் னோரன்னவற்று மேல் நிக்கும்' என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கம். 8 எனவே பாக்களை அடிதோறும் துணித்து நிறுத்தி இசைத்தலாகிய ஓசை வேறுபாட்டை உணர்த்தி வரும் பெயர் தூக்கு எனக் கொள்ளமுடிகிறது.

மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்'’8%

“தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி னால்சொல வல்லபிரான்86

என்பனவற்றுள் தூக்கு என்பது சீட்டுக் கவியையும் நூலையும் சுட்டுகிறது. ஆய்ந்து அறியத்தகும் பாக்களின் தொகுதி என்ற காரணத்தால் வந்த பெயர் எனலாம். செய்யுளால் ஆன நூல் எனினும் அமையும்.

பனுவல் : ஆழ்ந்து ஆய்ந்து எழுதப்பெற்ற காரணத்தால், பாட்டுகளின் தொகுதியாகிய நூல், பனுவல் என்னும் காரணப் பெயர் பெறுகிறது. இலக்கண, இலக்கியங்கள் பனுவல் என்ற சொல்லை நூல் என்ற பொருளில் ஆளுகின்றன.

"புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்’8 6

'பாயிரம் இல்லது பனுவல் அன்றே

இவற்றுள் பனுவல் என்னும் சொல் நூலைக் குறித்தது,

புத்தகம்: புதிய கருத்துகளைத் தன்னகத்துத் தாங்கி நிற்பத னாலும், அக்கருத்துகளை உள்ளத்தில் பதியவைப்பதனாலும் நூல் என்பதே புத்தகம் என்னும் வேறு பெயரையும் பெறுகிறது.

32. நன்னூல்-15. 33. தொல்.பொருள்.399.

34. நன்னூல் - 53.35.பெரியபுராணம், தொகுதி 4. பக். 16. 36. தொல்காப்பியம், பாயிரம். 37. நன்னூல் -54.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/29&oldid=1571099" இலிருந்து மீள்விக்கப்பட்டது