உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

சுவடி இயல் புத்தகம் என்னும் சொல் பொத்தகம் என்பதன் வழிவந்த சொல். பொத்துதல், பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல், பொத்து - பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக் கற்றை; எழுதிய ஏட்டுத் தொகுதி. சுவடி சேர்த்தல் என்னும் வழக்கை நோக்குக என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து என்று காட்டுவர்.82

"89

"புத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான “புத்தகம் அக்க மாலை வராபயம் பொருந்து கையாள்'”4° போன்ற பல இலக்கிய அடிகளில் புத்தகம் எனும் சொல் பெற்றுள்ளது.

ஆளப்

நூல் பெயர்க்காரணம்: இவற்றுள் புத்தகம் என்ற சொல் அச்சு நூலைக் குறித்து வழங்குவதாகும். சுவடிகளில் கூறப் பட்டுள்ள செய்திகளின் தொகுப்பைத் தந்திரம், தூக்கு, பனுவல் முதலான சொற்களால் வழங்கியது போலப் பெரும்பான்மையான வழக்கில் நூல் என்ற சொல் ஆளப்பெறுகிறது. தொடக்கமும் முடிவும் முரண்படுதலின்றி, தொகுத்தும் வகுத்தும் பொருள் விளக்கி நிற்கும் பொருண்மை நோக்கி நூல் என்னும் சொல் பெருவழக்காய் வழங்குவதாயிற்று. இதனைத் தொல்காப்பியம், நூலெனப் படுவது நுவலுங் காலை முதலு முடிவு மாறுகோ ளின்றித்

என்னும் கொண்டு

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே "*1

நூற்பாவினால் விளக்குகிறது. மேலும் பஞ்சினைக் நூற்கப்பெறும் நூலினைப்போல, சொற்களைக் கொண்டு ஆக்கப்படுதலினாலும், மரத்தின் புறக்கோட்டத்தைத் தீர்க்கும் எற்று நூலினைப் போல, மக்களின் மனக்கோட்டத்தைத் தீர்ப்பதனாலும் உவமையாகுபெயராய் நூல் என்ற வழங்குவதாயிற்று என்னும் கருத்தினை வழங்குகிறது நன்னூல். “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத

38. தேவநேயப்பாவாணரின் சொல்லாய்வுகள், பக். 107. 39. கம்பராமாயணம் - பாலகாண்டம், தனியன். 40. திருவிளையாடற்புராணம், கலைமகள் வணக்கம். 41. தொல்காப்பியம், பொருள், 478,

பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/30&oldid=1571100" இலிருந்து மீள்விக்கப்பட்டது