உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

15

என்பன

கையேவா யாகக் கதிரே மதியாக

மையிலா நூன்முடியு மாறு*2

"மரத்தின் - கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன்

மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு

மாந்தர்

நூலென்னும் பெயர் வந்ததற்குக் காரணம் கூறும் நன்னூல் நூற்பாக்கள்.

நூல் என்னும் சொல் : சொல் : இலக்கண இலக்கியங்களில் நூல் என்னும் சொல் பயின்று வருவதையும் காணமுடிகிறது.

"முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்

(தொல். பொருள்-649)

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்"

என்பன இலக்கணத் தொடர்கள்.

"நவில்தொறும் நூல்நயம் போலும் "மாலை மார்ப! நூலறி புலவ

6

(நன்னூல் - 5)

என இலக்கியங்களில் நூல் என்ற சொல் பெருவாரியாகப் பயின்று வருகின்றது. நூலகம், நூலழகு. நூலறிபுலவர், நூலறிவு, நூலாசிரியர், நூலுரைகாரர், நூல் குற்றம், நூல்நயம், நூல்வகை, நூல்வல்லார், நூல்வழக்கு. நூற்பா, நூற்பொருள், நூன்முகம், நூன்முடிபு ஆகிய தொடர்கள், நூல் என்னும் சொல் வழக்காற்றில் மிகுதியாக வருவதைப் புலப்படுத்துகின்றன.

சுவடி - வழக்காறு: மேலே கூறிய அனைத்துச் சொற்களின் பயன்பாட்டினை நோக்க, தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் ஆகிய சினைப்பெயர்கள் ஆகுபெயர்களாய் எழுதப்பெற்ற சுவடிகளைக் குறிக்கின்றன என்பது புலனாகும். புலனாகும். இதே போன்று தந்திரம், தூக்கு, பனுவல், புத்தகம் என்னும் சொற்கள் காரணக் குறிகளாய் நூலை உணர்த்துகின்றன என்பதும் புலப்படுகின்றது. நூல் என்ற பெயர் பொருட்சிறப்போடு உவமையாகு பெயராகவும்

காரணக்குறியாகவும் பெருவழக்கில் இருந்து வருகிறது என்பது வெளிப்படை. இவற்றைப் போலவே 'சுவடி' என்னும் சொல் நூலைக் குறித்து நிற்கும் காரணப் பெயராகி வழக்காற்றிலும் இருந்து வருகிறது என்பதும் தெளிவாகிறது.

42. நன்னூல். 24. 43. Gg. 25. 44. குறள, 783.

45. திருமுருகாற்றுப்படை, 261.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/31&oldid=1571101" இலிருந்து மீள்விக்கப்பட்டது