உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சுவடி இயல் இயல் : இயல் என்னும் சொல் இசை, இயற்றமிழ், இலக்கணம்,ஒழுங்கு, ஓத்து, குணம், சாயல், நடை, பகுதி என்னும் பொருள்களையுடையது. சுவடி இயல் என்னுமிடத்து இயல்பை உணர்த்துவது என்னும் பொருளில் அமைகிறது. உணர்த்தும் பகுதி என்னும் பொருளிலும் இச்சொல் இலக்கண இலக்கியங்களில் கையாளப்படுகிறது.

தொல்காப்பியத்தில் இயல்

“எழுத்துக்களின்

பிறப்பு

உணர்த்துதலின்

பிறப்பியல்

மொழிகளை...புணர்க்கும்

என்னும் பெயர்த்து ஆயிற்று.

முறைமை உணர்த்தினமையின் புணரியல் என்று பெயர் ஆயிற்று.

உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமை யின் உருபியல் என்னும் பெயர் உரித்தாயிற்று”

எனத் தொல்காப்பிய இயல்களுக்கு விளக்கம் கூறுவர் நச்சினார்க்

கினியர்.

"பெயர் இலக்கணம் இலக்கணம் உணர்த்துகின்றார் அதனால் இது பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று

என்பது சேனாவரையர் இயல் என்னும் சொல்லுக்குத் தரும் விளக்கமாகும். பிறப்பியல் தொடங்கி மரபியல் ஈறாகக் குறிப் பிடப்பெறும் இயல்கள் அனைத்தும் இவ்வாறு அமைவனவே. இலக்கியங்களில் - இயல்

6

"வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்

நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்து

"எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்'

என்னும் இலக்கிய அடிகளும் இயல் என்ற சொல்லைப் பயன் படுத்துதற்குச் சான்றாகின்றன.

சுவடி-இயல் : : சுவடிகளைப் பற்றி ஆய்வதும் அறிவதும், உணர்வதும் உணர்த்துவதும், கற்பதும் கற்பிப்பதுமாகிய பயிற்சியே 'சுவடிஇயல்' எனப்பெறுகிறது என்பதை இக்காட்டுகளும் விளக்கங் களும் உறுதிப்படுத்துகின்றன. இதே பொருளில் ஆளப்பெறும் உளவியல், சமூகவியல், தமிழியல், நடையியல், புவியியல் பொருளியல், மொழியியல், வணிகவியல் போன்ற தொடர்களும்

.

ஒப்புநோக்கத்தக்கனவாகும்.

46. சிலப்பதிகாரம், 3:38-39. 47. 6g. 3:2M DOLGOT LIT“

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/32&oldid=1571102" இலிருந்து மீள்விக்கப்பட்டது