உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

ஆ. சுவடி இயலின் நோக்கம்

17

சுவடிபற்றிய செய்தி: "சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் பொருள் தொடங்கிச் சுவடிகளின் செய்திகளை அச்சிட்டு வெளியிடும் முறை ஈறாகப் பல்வகைப் பொருண்மைகளை இத் துறை பெற்றுள்ளது. எனவே இவ்வாய்வின் விளைவாகச் சுவடி இயல் குறித்துப் பல்வேறு செய்திகள் புலனாகின்றன. அவற்றின் சுருக்கமே சுவடிஇயலின் நோக்கமாகத் தரப்படுகிறது.

தமிழ்ச் சுவடிகள் தமிழரின் பலதுறை அறிவினையும் தம்மகத்துப் பெற்றவையாகும். அவ்வனுபவ அறிவைச் சுவடி இயல் பயிற்சி எடுத்துக்காட்டுகிறது. பழங்கால எழுதுபொருள் களின் தன்மைகள் இப்பயிற்சியில் சுட்டிக்காட்டப் பெறுகின்றன. அதனால் பழங்கால எழுதுபொருள்களின் தன்மையோடு இக்கால எழுது பொருள்களின் வசதிகள் ஒப்பிட்டு அறிய முடிகிறது. பழந் தமிழரின் எழுத்து முயற்சியினைப் போலக் கடின உழைப்பினை மேற்கொண்டால் இக்கால வசதியில் பெரும்பயனைத் திரட்ட முடியும் என்ற உணர்வு இக்கல்வியால் தூண்டப்பெறுகிறது.

சுவடிகளின் அகஅமைப்பு புறஅமைப்புகளால் சுவடிகளின் வரலாறு அறியத் தூண்டுகிறது. சுவடிகளின் அழிவு எடுத்துக் காட்டப்பெற்று மேலும் அழியாவண்ணம் பாதுகாக்கச் செய்கிறது. மேலும் சுவடி திரட்டும்முறை, முறைப்படுத்தும்வழி, அச்சாகாத சுவடி அறியும் வழி ஆகியவை இக்கல்வியின்வழி கற்பிக்கப் பெறுகின்றன.

சுவடி ஆய்வுமுறை : மூலபாட ஆய்வின்வழி பாடவேறுபாடு களை அறியவும், உண்மைப் உண்மைப் பாடத்தை நிறுவவும் வகை செய் கிறது.

சுவடிப்பதிப்பு : சுவடிப்பதிப்பு முன்னோடிகளின் அனுபவக் கருத்துகளின் நன்மை தீமைகளை ஆய்ந்து சிறந்த பதிப்பு முறையை மேற்கொள்ள வழி வகுத்துக்காட்டுகிறது. யாப்புநெறி, கடின சந்திமுறை, நூலின் ஆய்வுரை, அடிக்குறிப்புமுறை ஆகியவற்றிலும் பயிற்சியளித்துப் பதிப்புப்பணியில் அனுபவம் பெறச்செய்கிறது. இவ்வாறான கருத்துகளை ஆய்வுசெய்து சுவடிப்பதிப்புக்கான பலவகை முடிவுகளைக் காண்பதே சுவடிஇயல் ஆய்வின் நோக்க மாகும்.

சுவ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/33&oldid=1571103" இலிருந்து மீள்விக்கப்பட்டது