உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இ. சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

-

சுவடி இயல்

தோற்றம் - பழைய கல்விமுறை : இக்காலத்தில் தாள்களும் அச்சுநூல்களும் பயன்படுவதுபோல மிகப்பழங்காலத்தும் இடைக் காலத்தும் ஏடுகளும் சுவடிகளுமே பயன்பட்டுவந்தன. பள்ளிகள் திண்ணைப்பள்ளிக்கூடம் அல்லது தெருப்பள்ளிக்கூடம் என்னும் பெயரால் நடைபெற்றுவந்தன. பெயருக்கு ஏற்ப அவை ஆசிரியர் வீட்டுத்திண்ணையிலேயே நடைபெறும்; கிராமப் பொது இடத்துத் திண்ணைகள், சத்திரம், சாவடி, ஊர்மன்றம், கோயில் ஆகிய டங்களிலும் நடைபெறுவதுண்டு. ஊரின் ஒருபுறத்தே உள்ள மரங்களின் நிழலிலும் அப்பள்ளி நடைபெறுவதுண்டு.

“சிந்தைமலர் சொற்றெளிவில் செழுங்கலைகள் பயிலத்தம் பந்தமற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினார்

'ஓத அணைந்த பள்ளியினில் உடன்கொண் டெய்தக்

கடிதென்றார் 43 இவ்வடிகள் கலைகளைப் பயிலுமிடம் பள்ளி எனப்பட்டது என்பதை உணர்த்துகின்றன. திண்ணைப்பள்ளியானதால் அவரவர் உட்காருவதற்குரிய சிறிய பாயினையும் ப (தடுக்கு) சுவடியுடன்

சேர்த்து எடுத்துச்செல்லுவர் என்பதை,

"பள்ளித் தடுக்குங் கையேடும்

படிக்குஞ் சுவடியும் பரிந்தெடுத்து

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. இப்பள்ளிகளுக்கு எல்லார் வீட்டுக்குழந்தைகளும் செல்லுவதில்லை. தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பியவர் மிகச்சிலரே. வசதியும் வாய்ப்பும் பெற்றிருந்த ஒரு சிலரே இவ்விருப்பம் கொண்டனர். இவர்களிலும் பெரும்பாலோர் எண்ணும் எழுத்தும் கற்றநிலையில் திண்ணைப்பள்ளிக் கல்வியோடு தங்கள் படிப்பை முடித்துக் கொண்டனர். வாழ்க்கைக்குத் தேவையான கணக்கும் மொழியறிவும் மட்டுமே போதும் என்று கருதினர். இதனாலேயே,

.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஷை.

48. சிறுத்தொண்டர்புராணம், 22. 49. 6g. 58. 50. பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை. 51. கொன்றை வேந்தன்-7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/34&oldid=1571104" இலிருந்து மீள்விக்கப்பட்டது