உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

19

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

6 2

என்னும் முதுமொழிகள் தோன்றலாயின. தனித்தனி ஆசிரியரை நாடிச்சென்று இலக்கண, இலக்கியங்களைத் திறம்படக் கற்றுத் தேர்ந்த வாய்ப்பினைப் பெற்றவர் மிகச்சிலரேயாவர். இந்த

நிலையே,

"தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே’58

என்னும் இலக்கணம் வகுக்கவும் துணைபுரிந்துள்ளது.

வேங்கடாசல

“அங்கே (திண்ணைப் பள்ளியில்) தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவைப் பெறுதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதிநூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். 764 9’54 என்னும் கூற்று திண்ணைப் பள்ளிக்கூடக் கல்வி யின் அளவைச் சுட்டுவதாகும். மேற்கல்வி: சென்னைப் பட்டணத்திலிருந்த... முதலியார் அதனை (தொல்காப்பியப் பொருளதிகாரத்தை)ப் பாடங்கேட்கும் விருப்பமுடையரானபோது பிறையூரிற் றிருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரை விட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும், வரதப்ப முதலியார் பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனானும், அதுகாரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்பமுதலியார் என்று பெயர் வந்தமை யானும்...நிச்சயிக்கலாம்’5 5

ஒருவரே

என்பதனால் தனியாசிரியரைத் தேடிச்சென்று சிறந்த நூல்களைக் கற்றவர்களின் தன்மையும் அளவும் புலனாகிறது. இவ்வாறு தேடிச்சென்றபோதும் தாம் விரும்பிய நூலைக் கற்க இயலாத நிலை ஏற்பட்டதையும் வரலாறு உணர்த்துகிறது. பாடங்கேட்க ஆசிரியர் ஒருவரை நாடிப்போது,

52. குறள், 392. 53. நன்னூல், 37.

54. மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், பக். 5. 55. தாமோதரம். பக். 121-122.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/35&oldid=1571105" இலிருந்து மீள்விக்கப்பட்டது