20
சுவடி இயல் "ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புதையலுக்குச் சமானம்... இவ்வளவு பிரயாசைப்பட்டுக் கற்றுக்கொண்டதை ... சுலபமாக உமக்குச் சொல்லி விடலாமா?... நான்போய் வருகிறேன்”66 என்று கூறிச்சென்ற செய்தியால் இவ்வுண்மையை அறியலாம். இக்கல்விமுறையில் ஒவ்வொரு நூலையும் உருப்போட்டு ஒப்பித்து முடிக்கவேண்டும் என்ற நிலை வழக்காற்றில் இருந்து வந்தது.
'புகவு பெறுவான்
வாரம் ஓதும்பரிசு : சூத்திரத்திலும் சூத்திராணத்திலுந் துருச்சொல்லி ஒன்பது புகவினில் இரண்டு கிரம வாரம் அடுத்தோதுவது. சாகையிலுங் கற்பத்திலுங் கணத்திலுந் துருச் சொல்லி ஒன்பது புகவினில் இரண்டுவாரம் அடுத்தோதுவது. நாலு பாதத்திலுந் துருச்சொல்லி ஒன்பது புகவினில் அகத்தூஹத்தில் இரண்டுவாரம் அடுத்தோதுவது
என்னும் செப்பேட்டுத் தொடர்கள் நூல் முழுமையையும் உருப் போட்டு முடித்தல் வேண்டும் என்ற கல்விமுறையைப் புலப் படுத்துவனவாகும். இம்முறை மிகக்கொடுமையாக இருந்ததாலோ என்னவோ
“ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா”
என்னும் தொடர் மக்களிடையே பரவியிருந்துள்ளது.
பாடம்
வாய்வழிப் பாடம் : ஆசிரியர் தாம் இயற்றிய அல்லது கற்றறிந்த நூலை வாய்மொழியாகவே பாடம் சொல்லி வந்தார். கேட்டவர் அவற்றைத் தம் மனத்தில் இருத்தி, அந்நூலினை வாய் மொழியாகவே பிறருக்கும் கற்பித்து வந்தார்.
நக்கீரர் செய்த களவியல் உரையைத் தம் மகனார் கீரங் கொற்றனாருக்கு உரைத்தார். கீரங்கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார்...
இவ்வாறு ஒன்பது ஆசிரியர் வழிமுறையை எடுத்துக்காட்டும் இறையனார் களவியல் உரை வாய்மொழியாகவே நூல்கள் கற்பிக்கப் பெற்று வந்தன என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது. இது து உரைநூலின் துணைகொண்டு பாடம் நடத்தப்பட்ட தலைமுறைகளைச் சுட்டுவதாகக் கொள்ளவும் இடமளிக்கிறது.
56. என் சரித்திரம், பக். 157-158.
57. கல்வெட்டு ஓர் அறிமுகம், பக். 27.