உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடி இயல்

21

இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் ஊக்கப்பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், ஏற்றப்பாடல்கள், நாடகப் பாடல்கள் போன்றவை எழுதப் படிக்கத் தெரியாத நாட்டுப்புற மக்களிடையே வாய்மொழி வழியாகவே வளர்ந்தவை; பரவியவை யாகும். இன்றும் கிராம நாடகக் குழுக்களில் உள்ள சிறந்த நடிகர்> பாடகர் ஆகியோருள் பலர் எழுத்து வாசனை அறியாதவராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமொழிச் சுலோகங்களைச் சொல்லி ஆலயங்களில் அருச்சனை செய்யும் பலர் வடமொழி கற்காதவர் ஆவர். இவை யாவும் வாய்மொழி வழி வளர்ந்தவை என்பது போதரும்.

எழுத்துப் பயிற்சி: எழுதும் தாள் இல்லாத அக்காலத்தில் மணலில் எழுதிப் பயிற்றுவிப்பதைத் தொடக்கநிலைப் பயிற்சி யாகக் கொண்டனர். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் தொடக்க நாளில் செந்நெல்லை ஒரு தட்டில் பரப்பி அதில் கைவிரலால் எழுதச் செய்தனர். நெல்லிற்குப் பதிலாக அரிசியையும் பயன்படுத்தினர். இதே முறையில் நாள்தோறும் மணலில் எழுதிப் பயிற்றுவித்தனர்.

இவ்வாறு எழுத்துகளை நன்றாக எழுதக் கற்ற பிறகு ஓலை யில் எழுதும் பயிற்சி தொடங்கப் பெறும். பிற்காலத்தில் கரும் பலகையில் (சிலேட்) எழுதும் பயிற்சி ஏற்பட்டது.

பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தி யாயர் ஓர் ஓலையில் எழுதித் தருவார். பிள்ளைகள் அதே ப மாதிரி எழுதிப் பழகுவார்கள். அந்த மூலஓலைக்குச் சட்டம் என்று பெயர்.” 5 8

58

இவ்வாறே தமிழ் எண்களையும் எழுத்துகளையும் பலமுறை எழுதிப் பழகினர் என்பதற்குச் சான்றாகப் பல சுவடிகள் கிடைக் கின்றன.

சுவடிகள் உருவாதல் : எழுதப் பழகும் இளைஞருக்கு ஓலை தயாரித்துத் தரும் பணி பெற்றோரைச் சார்ந்ததாயிற்று. உழைப்பு, ஓய்வின்மையாகிய காரணங்களால் பெற்றோர் அனைவருமே இப்பணியில் முழு ஊக்கம் செலுத்த முடிவதில்லை. வசதியற்ற பலர் சில ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொள்ள வேண்டியவராயினர்.

58. என் சரித்திரம்,பக் - 80.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/37&oldid=1571108" இலிருந்து மீள்விக்கப்பட்டது