உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சுவடி இயல் பள்ளியில் தாங்கள் படிக்க

சிறிய நூல் சுவடிகள் உருவாதல் : வேண்டிய நூல்கள், படித்து முடித்த சில நீதி நூல்கள், அந்தாதி, சதகம், மாலை ஆகிய சமயம் அல்லது இறை பற்றிய நூல்கள் முதலானவற்றை மட்டுமே அவர்கள் எழுதி வைத்தனர். மேலும் பள்ளியில் கற்பித்த 'குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறை களும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறைகளும்' 5 9 அடங்கிய சுவடி களையும் எழுதி வைத்தனர்.

'பண்டைக் காலத்தில் பதங்களைப் பிரித்துப் பழகுவதற்கும். பலவகையான பதங்களைத் தெரிந்து கொள்வதற்கும். மனனம் செய்வதற்கும் அனுகூலமாக இருக்குமென்று கருதி அந்தாதிகளை முதலில் மாணாக்கருக்குப் பாடம் சொல்லி வந்தார்கள்’60 இவ்வாறு கல்வி கற்றதன் அடிப்படையிலேயே சுவடிகள் உருவாகி யிருக்கின்றன. பல நூலகங்களிலும் நிறுவனங்களிலும் பாதுகாக்கப் பட்டு வரும் சுவடிகளுள் அறுபது விழுக்காடு இத்தகு சிறிய நூல்களே இருக்கின்றன.

இலக்கண, இலக்கியச் இலக்கியச் சுவடிகள் உருவாதல் : தொடக்கக் கல்வியை முடித்து, மேலும் கற்க வேண்டுமென்ற ஆர்வமும்,ஏற்ற வசதியும் வாய்ப்பும் பெற்றவர், தனித்திறமுடைய ஆசிரியரை நாடிச்சென்று இலக்கண, இலக்கியங்களைக் கற்றனர். கற்றனர். தாங்கள் கற்ற ஒரு சில நூல்களுக்கான சுவடிகளை மட்டும் எழுதி வைத்தனர்.

சுவடி உருவான தொடக்கநிலை : ஒரு சிலர் இலக்கணங்களும் பேரிலக்கியங்களுமாகப் பல நூல்களைக் கற்கும் நிலையில் அவற்றை எழுதி வைத்துக் கொண்டு பாடங்கேட்க வேண்டிய வராயினர். ஆசிரியரிடமிருந்தோ பிறரிடமிருந்தோ களுக்கான சுவடிகளைப் பெற்று எழுதிக் கொண்டனர். கிடைத்த சுவடிகள் ஒரே மாதியாக இருந்ததில்லை.

அந்நூல் அவ்வாறு

வாய்மொழியாகவே பாடங்கேட்டு நூல்களை முழுமையாக மனப்பாடம் செய்த கற்றவருள் யாரோ IT ஒருவர், ஏதோ ஒரு காலத்தில் தாம் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றிற்கு எழுத்து வடிவம் தருகிறார். இச்செயலையே பல்வேறு இடங்களில் உள்ளவர் மேற்கொள்ளுகின்றனர். வாய்மொழியாக

59. மீனாட்சிசுந்தரம்...சரித்திரம். பக்-5. 60. என் சரித்திரம், பக்-262.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/38&oldid=1571109" இலிருந்து மீள்விக்கப்பட்டது