உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

237

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இடம்பெறும். அம்முடிவிடம் வினாக்குறியோ வியப்பு முதலான உணர்ச்சிக் குறியோ பெறுமாயின் அங்கு முற்றுப்புள்ளி வைத்தல் கூடாது.

அறம்,பொருள், இன்பம் என்பன நூலால் பெறும்

பயன்களாகும்.

சென்றது பரிதி வட்டஞ் செம்மலு மசைவு தீர்ந்தான். இவற்றுள் முறையே வாக்கிய இறுதியும் பாடலின் முடிவிடமும் முற்றுப்புள்ளி பெற்றன.

எங்கு எழுந்தருளுவதினியே?

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க !

என்பவற்றின் முடிவிடம் முறையே வினாக்குறியும் உணர்ச்சிக் குறியும் பெற்றன. கருத்து முடிந்த விடமாயினும் இவ்விடங்களில் முற்றுப்புள்ளி இடம்பெறாது. பாடல்களுக்கும், பத்தி முதலான வற்றிற்கும் அமைக்கும் தலைப்புத் தொடர்களின் முடிவில் முற்றுப் புள்ளி தேவை இல்லை.

சுருக்கக் குறிப்புகளில் : சுருக்கக் குறிப்புகளின் பின் முற்றுப் புள்ளியிட்டுக் காட்டி அவை முழுச் சொற்கள் அல்ல என்பதை உணர்த்த வேண்டும்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு; கி.மு. முதலாம் நூற்றாண்டு;

தெ.ஆ. மாவட்டம் ; ஆ.பி.; ம. ஆரூரன்; திரு. மணிவண்ணன் என்பன சுருக்கக் குறிப்புகள். கிறித்துவுக்குப் பின் ஐந்தாம் நூற்றாண்டு என்று விரிந்து நின்ற சொற்களிடை புள்ளி எதுவும் வைப்பதில்லை. இதேபோல முறையே, தென்னார்க்காடு மாவட்டம். ஆந்திரப் பிரதேசம், மணியன் ஆரூரன், திருவாளர் மணிவண்ணன் என விரிந்து நின்றவிடங்களில் முற்றுப்புள்ளி இடுவ தில்லை. டாக்டர் (முனைவர்) ம. ஆரூரன் என்ற விடத்திலும் 'ம' என்னும் சுருக்கக் குறியின் பின்பே முற்றுப்புள்ளி வந்தது டாக்டர் என்ற முழுச்சொல்லையடுத்து முற்றுப்புள்ளி வருவ தில்லை.

எடுத்துக்காட்டுத் தொடர்களில்: இலக்கணக் குறிப்புகளை விளக்குமிடத்து, விளக்கத்திற்காகக் காட்டப்படும் எடுத்துக் காட்டுகள், சான்றுகள் ஆகிய சொற்றொடர்களின் கருத்து முடிவுற்றதாயினும் முற்றுப்புள்ளி இட்டுக் காட்ட

வேண்டுவதில்லை.

இறுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/253&oldid=1571337" இலிருந்து மீள்விக்கப்பட்டது