உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

சுவடி இயல்

எனவரும்.

யானைக்கோடு கிடந்தது மதிமுகம் வியர்த்தது

கருங்குதிரை ஓடிற்று

விளக்கத்திற்காகப் பிறநூல் மேற்கோள்கள் எடுத்துக்

காட்டப்படுமாயின் உரிய புள்ளிகளிட்டுக் காட்டவேண்டும். தொடருக்கேற்ற முற்றுப்புள்ளியும் பெறும்.

உணர்ச்சிக்குறி ( ! ) : விளிச்சொல்,

முன்னிலைச்சொல்,

வியங்கோள், வியப்பு, உவப்பு, இரக்கம், இகழ்ச்சி, அவலம் ஆகிய உணர்வுகளைப் புலப்படுத்தும் சொல் ஆகியவை நிற்குமிடங்களில் உணர்ச்சிக்குறி இடம்பெறும்.

கொற்கை வேந்தே ! என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே வேய்புரையும் மென்தோளீ! என்று வேண்டுவரே,

என்பனவற்றுள் அண்மைவிளி,

உணர்ச்சிக்குறி பெற்றன.

மகடூஉமுன்னிலைச் சொற்கள்

தேவரும் அறியாச் சிவனே காண்க! (வியங்கோள்) நங்கைமீர்கள்! இதுஓர் அற்புதம் கேளீர் ! (வியப்பு) என்னுடைய இன்னமுதே !

இராகவனே! தாலேலோ!

(உவப்பு)

கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ காகுத்தா !

கரிய கோவே!

(இரக்கம்)

விதியின்றி, மதியிலியேன்... காய்ந்த வாறே ! (இகழ்ச்சி) அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே !

(அவலம்)

இவை வியங்கோள் முதலாய

பொருளில் வந்த உணர்ச்சிக்

குறிகளின் எடுத்துக் காட்டுகளாகும்.

ஏவற்பொருளில் : ஒருமைஏவல். பன்மைஏவல், உடன்பாட்டு

ஏவல் எதிர்மறை ஏவவ் ஆகிய பொருள்களிலும்

இடப்பெறும்.

பசுபதியீசுரம் பாடு நாவே (ஒருமைஏவல்)

திகையன்மின் பேதைகாள் (பன்மைஏவல்)

உணர்ச்சிக்குறி

மன்னவனே அடியேனை மறவன்மின்: (எதிர்மறை)

இவற்றில் உடன்பாட்டுப் பொருள் எதிர்மறைப் பொருள்களில்

ஒருமை, பன்மையில் வந்த ஏவல் முற்றுகள் பெற்றன.

உணர்ச்சிக்குறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/254&oldid=1571338" இலிருந்து மீள்விக்கப்பட்டது