உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

239

வினாக்குறி ( ? )

வினாப்பொருள் நிகழும் தொடர்களின்

தீவினை

இறுதியின் மட்டும் வினாக்குறி இடப்பெறும்.

வினாக்குறி வந்தது.

கெடுமாறு உண்டோ? என வினாப் பொருளில்

வினாச்சொல்

நின்று, மேலும் சொற்கள் தொடர்ந்து

வாக்கியம் முடிவுறுமாயின் வாக்கியத்தின் இடையில் வினாக்குறி வருதல் கூடாது.

நீவிர் யாவர்? என்பது வினா; நீவிர் யாவர் என அவர் வினவினார் என்னும் தொடரில் யாவர் என்பதன் முன் வினாக்குறி இடுதல் கூடாது.

மேற்கோள் குறி (") : : ஒருவர் தம் கருத்துக்களுக்கு வலுவூட்ட, பிறர் உரைகளை மேற்கோளாக எடுத்தாளும்போது, அத்தொடர்களை மேற்கோள் குறிக்குள் அமைப்பதே வழக்காற்றில் உள்ளது.

"நிற்க அதற்குத் தக" என்பார் வள்ளுவர்-என்று காட்டுவது வழக்காறு.

ஒருவர் கூற்றில், மற்றொருவர் கூற்றினை எடுத்துக் காட்டுவ தற்கும் இக்குறியினைப் பயன்படுத்த வேண்டும். இது ஒற்றை மேற்கோள் குறியில் அமையும்.

ஈங்கிவர்க்கு - உண்டோ உலகத்து ஒப்போர்' என்று அக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல...

கொல்லன் கூற்று ஒற்றை மேற்கோளில் காட்டப்பெற்றது. ஒருவர்தம் உள்ளத்து எண்ணும் எண்ணங்களையும் கருத்து களையும் இவ்வாறே ஒற்றை மேற்கோளில் அமைப்பர்.

...தென்புலங்காவல் என்முதல் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்' என மன்னவன் மயங்கி வீழ்ந்தனன்.

இவை மேற்கோள் குறி அமைய வேண்டிய இடங்களாகும்.

சிறுகோடு (-) : பாடல்களில் வெண்பா, கலிவெண்பாக் களில் தனிச் சொல்லைப் பிரித்துக் காட்டச் சிறுகோடு பயன் படுத்தப்படும். உட்தலைப்பு, பத்தித் தலைப்புகள் கொடுத்து அதே வரியில் செய்தி தொடர்ந்து எழுதப்பெறுமாயின் சிறுகோடு அமைக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/255&oldid=1571339" இலிருந்து மீள்விக்கப்பட்டது