உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

சுவடி இயல்

சொல்லின்

ஒரு தொடரில் ஒருசொல் அமைந்து, அந்தச் பொருளையே தரும் வேறொரு சொல் முதல் நின்ற சொல்லின் விளக்கத்திற்காக அமையுமானால் அச்சொல்லின் இருபுறமும் சிறுகோடு இடுதல் வேண்டும்.

லாம்.

எடுத்துக்காட்டாக -உதாரணமாக -ஒரு குறட்பாவினைக் கூற இத்தொடரில் எடுத்துக்காட்டாக என்பதையே மீண்டும் உதாரணமாக என்னும் சொல்லால் கூறப்பட்டது. இங்கு இருபுறமும் சிறுகோடுகள் அமைந்தன. இயைந்து நிற்கும் தொடர் களைப் பிரித்துக் காட்டவும் சிறுகோட்டினைப் பயன்படுத்தலாம். ணைகோடு (-) (தொடர்கோடு )

ஒரு வரியின் முடிவில் வரும் சொல்லை உடைத்து அடுத்த வரியில் வைக்க நேரும்போது இடையே (வரியின் இறுதுயில்) இணைகோடு இடுவது தமிழில் அவசியமில்லை என்பது வழக்காறு. ஆயினும் அவ்வாறு உடைத்து அமைப்பதால் பொருள் வேறுபடு மிடத்து இணைகோடு இடுவது நல்லது.

'முல்லை வேலியையுடைய கோடை

மலைக்குத்தலைவ!

வில்லையுடைய வேட்டுவ !

என அமையும் வரிகளில், கோடை மலைக்குத்தலைவ !' என்னும் தொடர் இவ்வாறு பிரியுமாயின் பொருள் மயக்கம் ஏற்படுமாதலின் கோடை என்பதை அடுத்து இணைகோடிடுதல் அவசியம்.

ஒரு

ஒருசொல் நீர்மைத்தாய தொகைநிலைத் தொடர்போன்ற சொற்கள் உடைபடுமாயினும் இணைகோடிடுதல் வேண்டும். சொல்-லையோ; தொட - ரையோ என்பன போன்று உடைபடு மாயின் இணைகோடிடுதல் வேண்டும்.

பொருள் விளக்கம் வேண்டி பிரித்துக் காட்டப்பெறும் சொல்லாயின் இடையே இணைகோடிடுதல் நல்லது.

பஃறலை -பல்-தலை; பாடாண்டிணை -பாடு-ஆண்-திணை; உண்ணின்று-உள்-நின்று எனப் பிரித்துக் காட்டுமிடத்து இணை கோடு இடப்பட்டது.

அடைப்புக்குறி (பிறைவளைவு)

ஒரு சொல்லையோ தொடரையோ எழுதி, அதனை இவ்வாறும் குறிப்பர் என்று காட்ட. வேறு சொல்லையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/256&oldid=1571340" இலிருந்து மீள்விக்கப்பட்டது