உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

241

தொடரையோ பயன்படுத்தும்போது அதனை அடைப்புக் குறிக்குள் காட்டுவது உண்டு. இந்தப் பத்தித் தலைப்பையே இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

சுவடிப்பதிப்புத் தலைப்புகளில் : சுவடிப் பதிப்பில் இக்குறி மிகுதியாகப் பயன்படும். அதாவது, சுவடியில் இல்லாத சில தலைப்புகள், பெயர்கள், விளக்கங்கள், குறிப்புகள் ஆகியவற்றைத் தெளிவு கருதி பதிப்பாசிரியர் ஆங்காங்கு அமைக்க நேர்ந்தால் அவற்றை அடைப்புக் குறிக்குள் அமைக்க வேண்டும். இல்லையேல் அத்தலைப்பு முதலானவை சுவடியில் உள்ளவை யே என்று ஆகி

விடும்.

ஆற்றுவளம் எனவும், நாட்டை, தோடி, பாட்டுநடை, பண் அமைக்கும்போது

காப்பு, அவையடக்கம், நகரச்சிறப்பு, விருத்தம், வெண்பா, கலித்துறை எனவும், புன்னாகவராளி எனவும் பாடற்பொருள், முதலியவற்றைப் பதிப்பாசிரியரே ஆய்ந்து இவற்றை அடைப்புக் குறிக்குள் அமைக்க சுவடியிலேயே இருந்து பதிப்பித்தால் இக்குறி இடவேண்டாம்.

வேண்டும்.

வை

இடைப்பகுதி : சுவடிப்பதிப்பில் பாடலாயினும், உரைநடை யாயினும் இடையில் விடுபட்டதைச் சேர்த்தல், தவறுகளைத் திருத்தியமைத்தல், மிக்கு வருவதை விலக்கிக் காட்டுதல் ஆகியவை நிகழுமாயினும் அவற்றை அடைப்புக் குறிக்குள் காட்டுவர். இம்முறை கற்போருக்குத் தடையாகிறது. ஆதலின் அவற்றை அடிக்குறிப்பில் தருதல் வேண்டும் என்பது இவ்வாய்வில் காட்டப் பெறும் முடிவு ஆகும். விடுபட்டதைச் சேர்த்தல், திருத்தல் ஆகிய வற்றால் முழுமையாக்கித் தருவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

உய்யும் வண்ணம் (ந்) நினைமின் (மிகுதி) ஏலா(தி) உருண்டையது (விடுபட்டது) சரக்குவகை கழ(ள)ஞ்சு ஆகும் (திருத்தம்)

என்னும் இடங்களில் அடைப்புக்குறி இடப்பெறும். அடைப்புக்குறியும் பிறகுறிகளும்

ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்கு இறுதியில் அடைப்புக் குறியில் அமைந்த சொல் அல்லது தொடர் வருமாயின் அடைப்புக் குறிக்குப் பின்னால் புள்ளியிடுதல் வேண்டும்.

சான்று : குற்றங்கள் மூன்று : அவை

இணைவிழைச்சு(காமம்),

வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்) என்பனவாகும்.

சுவ. - 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/257&oldid=1571341" இலிருந்து மீள்விக்கப்பட்டது