உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242.

சுவடி இயல் விளக்கமாக வரும் முழுத் தொடரும் அடைப்புக் குறிக்குள் இருப்பின் அடைப்புக் குறிக்குள்ளேயே முற்றுப்புள்ளியைப் போட வேண்டும்

சான்று : திருவாதவூரர் குருவருளைப் பெற்ற இடம் திருப் பெருந்துறையாகும். (அது இக்காலத்தில் ஆவுடை யார்கோயில் என வழங்கப்படுகிறது.)

பரை அடைப்புக் குறி ( [] )

அடைப்புக்குறிக்குள் விளக்கம் தரவேண்டியிருந்தால் அங்கும் அதே அடைப்புக் குறியைத் தரலாம். பகர அடைப்புக்குறி

அவசியமில்லை.

சான்று : வடநூலார் உயிர்களுக்கு வரும் துன்பங்களைத் 'தாபத்திரயம்' என்பர். (தாபத்திரயங்கள் மூன்று அவை: ஆத்யாமிகம் (தன்னைப் பற்றியன), ஆதி பௌதிகம் (பிற உயிர்களைப் பற்றியன), ஆதிதை விகம் (தெய்வத்தைப் பற்றியன) என்பனவாகும்.)

ஆனால் பிறர் உரைகளை மேற்கோளாக எடுத்தாளும்போது, நூலாசிரியர் இடையே தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதனைப் பகர அடைப்புக் குறிக்குள் அமைக்க வேண்டும்.

சான்று :

"மெய்கண்டாரின் குலகுருவாகிய சகலாகம் பண்டிதர், [பிற்காலத்தில் அருணந்தி] தம் பெயருக் கேற்ப, எல்லா ஆகமங்களிலும் வல்லவராக விளங்கினார்.

இதன் பொருள், என்றவாறு என்னும் உரையின் தொடக்கம், முடிவுகளாகிய தொடர்களிலும் அடைப்புக் குறியினைப் பயன் படுத்தினர். சுருக்கக் குறிப்புகளாயினும் இக்குறியில் அமைப்ப துண்டு.

இதன் பொருள், என்றவாறு என்பன போன்ற யாவும் சுவடியில் இல்லையாயின் மட்டும் அடைப்புக் குறியைப் பயன் படுத்தலாம். இவ்வாறான அடைப்புக்குறி முறைகள் சுவடிப் பதிப்பில் பெரிதும் பயன்படுவனவாகும்.

சமக்குறி (= )

பதவுரை தந்துவந்த பழைய முறைப் பதிப்புகளில் மூலச் சொல்லையடுத்துச் சமக்குறியிட்டு அதனைத் தொடர்ந்து அச்சொல்லுக்கான உரை எழுதப்பட்டது. சொற்பொருள் அகர நிரலிலும் இக்குறி பயன்படுத்தப்பட்டது. க்காலத்துப் பதிப்பு களில் சிறுகோடு இடும் முறையே கையாளப் பெறுகிறது. சமக்குறி வழக்கற்றது என்றே கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/258&oldid=1571342" இலிருந்து மீள்விக்கப்பட்டது